‘இத யாரும் எதிர்பாக்கல’.. பிரபல வீரரின் காலில் விழுந்த ரசிகர்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Oct 21, 2019 10:51 PM

இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையேயான கடைசி டெஸ்ட் போட்டியின் போது தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கின் காலில் ரசிகர் விழுந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

WATCH: Fan invades pitch to hug Quinton De Kock an touch his feet

தென் ஆப்பிக்க அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் நடந்து முடிந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 497 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது.

இந்திய அணியைப் பொருத்தவரை தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா 212 ரன்களும், ரஹானே 115 ரன்களும் எடுத்து அசத்தினர். இதனை அடுத்து பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸ்ஸில் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனைத் தொடர்ந்து விளையாடிய இரண்டாவது இன்னிங்ஸ்ஸிலும் 132 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மைதானத்துக்குள் நுழைந்த ரசிகர் ஒருவர் தென் ஆப்பிரிக்க வீரர் டி காக்கின் காலில் விழுந்தார். உடனே பாதுகாப்பு அதிகாரிகள் அவரை அங்கிருந்து அழைத்து சென்றனர். அப்போது ரசிகர் தவறிவிட்ட செருப்பை டி காக் மைதானத்துக்கு வெளியே வீசி ரசிகரிடம் ஒப்படைத்தார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : #BCCI #ICC #INDVSA #TEST #CRICKET #QUINTONDEKOCK #FAN #DECOCK