என்ன வீட்டு 'வாடகை' மட்டும் 15 லட்சமா?... அடுத்த பிளைட் 'புடிச்சு' இந்தியா வாங்க... அதிரடி உத்தரவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manjula | Dec 31, 2019 01:16 PM

வீட்டு வாடகையாக மாதம் ரூபாய் 15 லட்சம் கொடுத்த இந்திய தூதரை, மத்திய அரசு நாடு திரும்ப வைத்துள்ளது.

India recalls envoy from Austria for spending Rs 15 lakh a month

ஆஸ்திரியா நாட்டிற்கான இந்திய தூதர் ரேணு பால் மத்திய அரசின் நிதியை தவறாகவும், முறைகேடான வழிகளிலும் பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் மத்திய கண்காணிப்பு குழுவான CVC அவர்மீது விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் ரேணு பால் வீட்டு வாடகைக்கு மட்டுமே மாதம் 15 லட்ச ரூபாயினை செலவு செய்தது தெரியவந்தது.

மேலும் வெளியுறவுத் துறையில் பணியாற்றிய ரேணு, VAT வரி திரும்ப பெறுதலில் மோசடி செய்ததாகவும், உண்மைக்கு புறம்பான தகவல்களை பல இடங்களில் அளித்திருந்ததாகவும் விசாரணை அதிகாரிகள் குற்றம் சாட்டி இருக்கின்றனர். இதுதொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம் வெளியுறவு அமைச்சகத்தின் ஒரு குழு ஆஸ்திரியா சென்று விசாரணை நடத்தி, அந்த அறிக்கையையும் தற்போது சமர்ப்பித்துள்ளது.

இதையடுத்து அவரை ஆஸ்திரியா நாட்டில் இருந்து உடனடியாக டெல்லி திரும்ப மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதவிர நிர்வாக ரீதியாகவும்,  ரீதியாகவும் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிப்பதற்கும் மத்திய அரசு அவருக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags : #AUSTRIA #CENTRALGOVERNMENT