SAFETY முக்கியம் 'மக்களே'... 'கொரோனா' மீண்டும் 'டச்' பண்ணாம இருக்க... 'ஜப்பான்' யுக்தியை கையிலெடுத்த தமிழக அமைச்சர்!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று கடும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில், சில தமிழக அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் ஆகியோருக்கும் கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்தனர்.
![tn minister sellur raju used virus shut to prevent virus tn minister sellur raju used virus shut to prevent virus](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-minister-sellur-raju-used-virus-shut-to-prevent-virus.jpg)
தமிழக அமைச்சர் செல்லூர் ராஜு கொரோனா தொற்று மூலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பூரணமாக குணமடைந்து தற்போது மீண்டும் மக்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், செல்லூர் ராஜு தற்போது எங்கு சென்றாலும் தனது கழுத்தில் நீல வர்ண அடையாள அட்டை போன்ற வைரஸ் தடுப்பு அட்டை ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.
'வைரஸ் ஷட் அவுட்' என்ற பெயரில் ஜப்பான் நிறுவனம் ஒன்று தயாரித்துள்ள இந்த வைரஸ் தடுப்பு அட்டையை ஒருவர் அணிந்து கொண்டால் அவரின் ஒரு மீட்டர் சுற்றளவிற்கு வைரஸ் கிருமிகள் மூச்சுக்காற்றில் பரவுவதை தடுக்கும் என கூறப்படுகின்றது. இந்த அட்டைக்குள் நிரப்பப்பட்டுள்ள குளோரின் டை ஆக்ஸைடு காற்றில் பரவி கிருமிகளை தடுக்கும் என்கின்றனர் இதன் தயாரிப்பாளர்கள்.
இந்த வைரஸ் தடுப்பு அட்டை அதிகம் ஆட்கள் கூடும் இடங்களில், அலுவலங்களில் பயன்படுத்தலாம். இதன் விலை 150 முதல் 1500 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆறு மாதத்திற்கு முன்பே இந்த வைரஸ் தடுப்பு அட்டை பயன்பாட்டுக்கு வந்தாலும், கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்துமா என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக இதுவரை நிரூபணம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு குணமடைந்த போதும், மீண்டும் தன்னை அண்டாமல் இருக்க வேண்டி அமைச்சர் செல்லூர் ராஜு எடுக்கும் நடவடிக்கைகள் கவனம் ஈர்த்து வருகிறது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)