'கொரோனாவால் எகிறிய விவாகரத்து'...'அதையே பணமாக்க நிறுவனம் போட்ட ஐடியா'... அத கேட்டா நீங்களே கடுப்பாவிங்க!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Jeno | Apr 15, 2020 07:17 PM

கொரோனாவால் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், கணவன், மனைவி வீட்டில் இருப்பதால் விவாகரத்து அதிகரித்த நிலையில், அதையே ஜப்பான் நிறுவனம் ஒன்று புதிய ஐடியா மூலம் பணமாக்கியுள்ளது.

Japan Firm Offers Spouses Furnished Apartments To Avoid Divorce

கொரானாவிற்கு இதுவரை ஜப்பானில் 7600 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 100க்கும் மேற்பட்டோர் இதுவரை பலியாகியுள்ளார்கள். இதையடுத்து டோக்கியோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதன் காரணமாக ஜப்பான் மக்கள் பலரும் வீட்டிலிருந்தவாறே பணி புரிந்து வருகிறார்கள். இது அவர்களை கடும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி உள்ளது. அதன் வெளிப்பாடாக, கணவன், மனைவிக்கு இடையே பிரச்சினைகள் அவ்வப்போது வெடித்த வண்ணம் உள்ளது.

இதனைக் கூர்ந்து கவனித்து வந்த டோக்கியோவைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் கசோகு என்ற நிறுவனம், அதையே பணமாக்க முடிவு செய்தது. அதன் அடிப்படையில், விவாகரத்திற்கு முன்பு கொஞ்சம் யோசியுங்கள், என்று விளம்பரப்படுத்தி தங்களின் சொகுசு வீடுகளில் தங்குங்கள் எனக் கூறியிருக்கிறது. அதற்குக் காரணமும் இருக்கிறது. அந்த நிறுவனம் கூறும் தற்காலிக சொகுசு வீடுகளில் எல்லா வசதிகளும் இருக்கும். நீங்கள் தனியாகவோ அல்லது குடும்பமாகவோ வந்து தங்கலாம்.

ஒரு வேளை கணவனோ அல்லது மனைவியோ கூட தனியாக வந்து தங்கிக் கொள்ளலாம். அதன் மூலம் உங்களின் கவலைகளை மறந்து ஜாலியாக இருக்கலாம் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதன் மூலம் விவாகரத்தைத் தடுக்கலாம் என அந்த நிறுவனம் கூறுவது தான் சற்று வேடிக்கை. குறிப்பிட்ட சொகுசு வீடுகளில் தங்குவதற்கு ஒரு நாளைக்கு 3133 ரூபாய் வசூலிக்கப்படும் என்று, அந்த நிறுவனம் கூறியுள்ளது.

இதனிடையே இந்த நேரத்தில் கூட எப்படிப் பணம் பண்ணலாம் என்பதைப் பற்றித் தான் யோசிப்பார்களா என நெட்டிசன்கள் பலரும் கடுப்பாகி வருகிறார்கள்.