VIDEO : கொரோனாவின் பிடியில் சிக்கி தவித்த 'இளைஞர்'... "திடீரென நிகழ்ந்த அந்த ‘அதிர்ச்சி’ சம்பவம்"... 'நோயாளி'க்கு செய்த உதவியால்... 'உயர்ந்து' நின்ற மருத்துவர்களின் 'மனிதநேயம்'! - நெகிழ வைக்கும் நிகழ்வு!
முகப்பு > செய்திகள் > தமிழகம்புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவருக்கு கடந்த மாதம் 28 ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
![Pudukottai doctors big help to Corona patient and video gone viral Pudukottai doctors big help to Corona patient and video gone viral](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/pudukottai-doctors-big-help-to-corona-patient-and-video-gone-viral.jpg)
இந்நிலையில், அவர் புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு வேண்டி அனுமதிக்கப்பட்டார். அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஐம்பது வயதான அவரது தந்தை மாரடைப்பின் காரணமாக இன்று உயிரிழந்துள்ளார். தந்தையின் மரணத்தால் நிலை குலைந்து போன அந்த இளைஞர், தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை மருத்துவர்கள் முன் வைத்துள்ளார்.
இளைஞரின் கோரிக்கையை ஏற்ற மருத்துவர்கள், இளைஞருக்கு கொரோனா தொற்று இருக்கும் நிலையில், அவருக்கு பாதுகாப்பு உபகரண உடை அணிந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் இளைஞரை மயானத்திற்கு அருகே கொண்டு வந்துள்ளனர். பின்னர் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை செய்து விட்டு, பின்னர் மீண்டும் அந்த இளைஞர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
கொரோனா தொற்று இளைஞருக்கு இருந்த போதும், தந்தைக்கு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்பதற்காக, அவரை பாதுகாப்பான முறையில் அழைத்து சென்று திரும்ப அழைத்து வந்த மருத்துவர்களின் மனித நேய செயல் பலரை நெகிழ வைத்துள்ளது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)