"முடியல!.. சமூகம், பொருளாதாரம்னு எவ்வளவோ இருக்கு!.. கொரோனாவும் கம்மி ஆயிருச்சு!".. அவசர நிலையை முடித்துக் கொண்ட நாடு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகளவில் 54 லட்சத்துகும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஜப்பானில் 16,650 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருப்பதோடு 870 பேர் இதற்கு பலியாகியுமுள்ளனர்.

இந்நிலையில் கொரோனாவை முன்னிட்டு நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருந்த அவசர நிலையை முழுமையாக முடிவுக்கு கொண்டுவருவதாக ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே அறிவித்துள்ளார். ஜப்பானில் கடந்த 7-ஆம் தேதி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அந்நாட்டின் பிரதமர் அவசர நிலையைப் பிரகடனப்படுத்தினார். பின்னர் நாட்டின் பலபகுதிகளில் ஏற்கனவே விலக்கப்பட்டிருந்த வர்த்தக நடவடிக்கைகள் படிப்படியாக மீண்டும் துவக்கப்பட்டன.
மேலும், கடந்த ஒன்றரை மாதம் கொரோனா பரவலுக்கு எதிராக எடுத்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் காரணமாக கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதாகவும், கொரோனாவுக்கு பிந்தைய சமூக மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் ஜப்பான் துவங்க உள்ளதாகவும் அந்நாட்டின் பிரதமர் அறிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் பொருளாதாரத்தை சீரமைக்க நிவாரண திட்டங்களை உள்ளடக்கிய துணை பட்ஜெட்டை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் கூடுதலாக தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
