கொரோனா அச்சுறுத்தலால்... மருத்துவமனைக்கு வராமலேயே... நோயாளிகள் சிகிச்சை பெற எய்ம்ஸ் மருத்துவமனை அதிரடி முடிவு!

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Manishankar | Mar 26, 2020 07:19 AM

கொரோனா தொற்று முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முக்கிய நோயாளிகளுக்கு காணொளி மூலம் மருத்துவர்கள் மருந்து பரிந்துரைகள் செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

new delhi aiims decides to treat patients via video conferencing

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க வேண்டும் என்ற முனைப்பில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தீவிரமான நடவடிக்கையில் இறங்கியுள்ளன. எனினும், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

பிரதமர் மோடி அறிவிப்பின்படி, 21 நாட்கள் ஊரடங்கு அமலில் உள்ளதால் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மருத்துவம் உள்ளிட்ட சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை.

இந்நிலையில், எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முக்கிய நோயாளிகளுக்கு காணொளி மூலம் மருத்துவர்கள் மருந்து பரிந்துரை அளிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மருத்துவர் ரண்தீப் குளேரியா கூறியதாவது:

மருத்துவ சேவைகளுக்கு எந்த தடையும் இல்லை. இருப்பினும் கொரோனா தொற்று இருப்பவர்கள் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளதால் அங்கு வர மற்ற நோயாளிகள் அச்சப்படுகின்றனர். ஆனால் முக்கிய நோய்கள் பலவற்றிக்கும் மக்கள் சிகிச்சை பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

எனவே ஆன்லைன் மூலமாக நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க முடிவு செய்துள்ளோம். காணொளிக் காட்சியில் இணைந்து நோயாளிகள் மருத்துவர்களை அணுகலாம். அவர்களுக்கு தேவையான மருத்துவ ஆலோசனைகள் வழங்கப்படும். இதனால் மக்கள் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அலைய வேண்டிய கட்டாயம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags : #CORONAVIRUS #CORONA #AIIMS #DELHI #CORONAVIRUSINDIA