'குணமடைந்தவர்களின் உடலில் தான்... கொரோனாவுக்கான மருந்து உள்ளதா!?'... சீன மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Manishankar | Mar 26, 2020 09:06 AM

கொரோனாவைக் குணமாக்க சீனா புதிய முயற்சியில் இறங்கியுள்ளது.

chinese doctors new strategy to combat coronavirus

கொரோனாவால் உலக நாடுகள் உயிர் மற்றும் பொருளாதார இழப்பை சந்தித்து வருகின்றன. ஸ்பெயின், இத்தாலி ஆகிய நாடுகளில் மக்கள் கொத்துக்கொத்தாக இறந்து வருகிறார்கள். இந்த கொரோனாவை குணமாக்கும் மருந்தை கண்டறிய உலக நாடுகள் பல தீவிரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், கொரோனா உருவான இடமான சீனா புதியதொரு முயற்சியை தொடங்கியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பின் குணமானவர்கள் உடலில் இருந்து எடுக்கப்பட்ட ரத்தம் மூலம் சிகிச்சை தருவதுதான் அந்த நடைமுறை.

இதனால், குணமடைந்தவர்களின் ரத்தத்தில் உள்ள பிளாஸ்மா அணுக்களை பிரித்தெடுத்து அது சிகிச்சை தேவைப்படுபவரின் உடலில் செலுத்தப்படும். கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு அதிலிருந்து குணமடைந்தவரின் உடலில் அவ்வைரஸுக்கு எதிரான எதிர் உயிர்கள் வளர்ந்திருக்கும் என்றும் இவை மற்றவர்களை குணப்படுத்த உதவியாக இருக்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே முறையில் கொரோனாவுக்கு சிகிச்சை தர அமெரிக்க மருத்துவர்களும் அந்நாட்டு மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பின் ஒப்புதலை கோரியுள்ளனர். இது மிகப்பழங்கால நடைமுறைதான் என்றும் பல்வேறு தொற்று நோய்களுக்கு சிகிச்சை தர இம்முறை வெகுவாக பயன் தந்துள்ளதாகவும், வாஷிங்டன் மருத்துவ பல்கலைக்கழகத்தின் மருத்துவர் ஜாஃப்ரி ஹெண்டர்சன் கூறியுள்ளார். எனினும் இந்த முறை கொரோனாவை குணப்படுத்த எந்தளவு உதவும் என்பது பரிசோதனைகளுக்கு பின்பே தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

 

Tags : #CORONA #CORONAVIRUS #DOCTORS #CHINA #COVID19