“கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க”... ஈஷா அறக்கட்டளையின் ‘நெகிழவைக்கும்’அறிவிப்பு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 26, 2020 10:27 PM

கொரோனா வைரஸால் பாதிப்புக்குள்ளாகும் தினக் கூலி தொழிலாளர்களை பாதுகாக்க உலகம் முழுவதும் உள்ள பல லட்சக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் தங்களால் இயன்றதை செய்ய முன் வர வேண்டும் என்று சத்குரு ஜக்கி வாசுதேவின், ஈஷா யோகா மையம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

TN govt can use isha foundation to treat corona victims, Sadhguru

இதுபற்றி ஈஷா மையம் சார்பில், இந்தியாவில் உள்ள ஈஷா தன்னார்வலர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பகுதியில் வேலையின்மையால் பசி, பட்டினியால் வாடும் 2 பேருக்காவது உணவு அளித்து உதவ வேண்டும் என்றும் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், உணவின்றி பட்டினியால் ஒருவர் இறந்தார் என்கிற சூழ்நிலை வராமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், இதுபோன்றதொரு இக்கட்டான சூழ்நிலையில் குடிமக்கள் ஒவ்வொருவரும் தனிநபராக தன்னாலான உதவிகளை செய்வதோடு, உள்ளூர் அரசு நிர்வாகம் எடுக்கும் முயற்சிகளுக்கும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது. தவிர,  தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்தாலோ அலலது பொதுமக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க கூடுதல் இடம் தேவைப்பட்டாலோ, அப்படியான நிலையில் தமிழக அரசு ஈஷா வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags : #ISHAFOUNDATION #CORONAVIRUSININDIA