“18 வயது இளைஞர் உட்பட.. தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா! இதுல 2 பேருக்கு”.. அமைச்சர் சொன்ன புதிய தகவல்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | Mar 25, 2020 11:55 PM

தமிழகத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை சார்பில் அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் கூறியுள்ளார்.

3 new positive cases of covid19 including 18 Yr Male

தமிழகத்தில் 18 வயது ஆண் நபர், 66 வயது முதியவர் மற்றும் துபாயில் இருந்து வாலாஜா திரும்பிய 63வயதான நபர் என 3 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது.

இவர்களுள் 18 வயதான இளைஞருக்கு, ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிடம் இருந்தும், 66 வயது முதியவருக்கு பெருந்துறை மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொண்டு வரும் தாய்லாந்தை சேர்ந்த நோயாளியிடம் இருந்தும் கொரோனா பரவியதாக கண்டறியப்பட்டுள்ளதாக

அமைச்சர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 

Tags : #CORONAVIRUSOUTBREAK #CORONAVIRUSININDIA #COVID19