'இல்லங்களில்' இருந்தே மருந்துகளை பெற...' இலவச' எண் தொடக்கம்: அமைச்சர் விஜயபாஸ்கர்

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Manjula | Apr 14, 2020 12:43 AM

இல்லங்களில் இருந்தே மருந்துகளை பெறும் வகையில் இலவச தொலைபேசி எண்ணை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.

TN Government Announced Toll Free Number for getting Medicines

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், '' மக்கள் நீண்ட நேரங்களில் மருந்துக்கடைகளில் நிற்பதை தடுக்கும் பொருட்டு முதல்வரின் உத்தரவுக்கு இணங்க 4000 மருந்தகங்களை இணைத்து பின்வரும் இலவச எண்ணை தொடங்கி இருக்கிறோம் 18001212172.

இதற்கு கால் செய்தால் அருகில் உள்ள மருந்தகங்களுடன் இணைக்கப்படும். பின்பு அந்த மருந்தகத்தில் இருந்து நேரடியாக அவர்களின் வீட்டிற்கு சென்று மருத்துவரின் குறிப்புகளை பெற்றுக்கொண்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தற்போது சென்னையில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த திட்டம் ஓரிரு நாட்களில் தமிழகம் முழுவதும் அறிமுகம் செய்யப்படும்,'' என தெரிவித்து இருக்கிறார்.