'மக்களுக்கு ஒரு நல்ல செய்தி'...'துபாயிலிருந்து வந்தவருக்கு குணமாயிடுச்சு'... ஆட்சியர் வெளியிட்ட தகவல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர் குணமாகி விட்டதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்திலும் கொரோனா தீவிரமாக பரவி வரும் நிலையில், வைரஸ் பரவுவதை தடுக்க மாநில அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பல்வேறு மாவட்ட ஆட்சி தலைவர்களுக்கும் பம்பரமாக சுழன்று தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட முதல் நபர் குணமாகி விட்டதாக மாவட்ட ஆட்சி தலைவர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், துபாயில் இருந்து நெல்லை திரும்பியவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் பலனாக அவர் தற்போது குணமாகி வீட்டிற்கு அனுப்பப்படுவர். இருப்பினும் வீட்டிற்கு சென்ற பிறகு 14 நாள் தனிமைப்படுத்தபடுவார் என ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.
