யாராவது 'ஹெல்ப்' பண்ணுங்க பிளீஸ்... நடுரோட்டில் 'பதறிய' இளைஞர்... பொதுமக்களுக்கு 'காத்திருந்த' அதிர்ச்சி!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நீண்டநாள் கழித்து எடுத்த பைக்கில் 3 அடி நீளமுள்ள நல்ல பாம்பு இருந்ததால் இளைஞர் அதிர்ந்து போன சம்பவம் நெல்லையில் நடந்துள்ளது.

நெல்லை டவுன் பகுதியை சேர்ந்தவர் நடராஜ். இவர் நீண்டநாள் கழித்து தன்னுடைய பைக்கை எடுத்துக்கொண்டு நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள செல்போன் கடைக்கு சென்றுள்ளார். பைக்கை நிறுத்தி ஸ்டாண்ட் போடும்போது நீண்டதாக வால் பகுதி ஒன்று தெரிந்துள்ளது. அச்சமடைந்து அவர் பார்த்தபோது பைக் எஞ்சின் பகுதியில் பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதைக்கண்டு அவர் பதறியடித்து அங்கிருந்தவர்களிடம் உதவி கேட்டுள்ளார்.
எனினும் பைக்கில் பதுங்கி இருந்த பாம்பை கண்டறிய முடியவில்லை. எனினும் ஆளாளுக்கு பைக்கை தட்டியதால் பயந்து போன பாம்பு கண்ணிமைக்கும் நேரத்தில் மற்றொரு பைக்கின் மீது பாய்ந்து பதுங்கி கொண்டது. தொடர்ந்து சற்று நேரம் கழித்து அந்த பைக்கில் இருந்து பாம்பு கீழே இறங்க அதை கல்லால் அடித்து கொன்றனர். இதனால் அந்த பகுதியில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது.
