'சென்னையில் பொய்த்துப்போன எதிர்பார்ப்பு'... 'தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகள்'... வெளியான முழு பட்டியல்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் பாஜக போட்டியிடும் தொகுதிகளுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
![TN Election : BJP releases list of 20 candidates TN Election : BJP releases list of 20 candidates](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-election-bjp-releases-list-of-20-candidates.jpg)
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக 20 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இந்நிலையில் எந்தந்த தொகுதிகளில் பாஜக போட்டியிடுவது என்பது குறித்த இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அது முடிவுக்கு வந்து பாஜக போட்டியிடும் தொகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரைத் துறைமுகம் மற்றும் ஆயிரம் விளக்கு தொகுதிகள் மட்டுமே பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. சேப்பாக்கத்தில் குஷ்புவும், மயிலாப்பூரில் கரு.நாகராஜன் அல்லது கே.டி.ராகவன், ஆயிரம் விளக்கில் கு.க.செல்வம், துறைமுகத்தில் வினோஜ் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் போட்டியிட உள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால் தற்போது பாஜகவுக்குச் சென்னையில் 2 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
குஷ்பு போட்டியிடுவார் எனப் பலரும் எதிர்பார்த்த நிலையில், பாஜகவினர் இறங்கி வேலை பார்த்த சேப்பாக்கம் தொகுதி ஒதுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே கன்னியாகுமரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. குளச்சல், நாகர்கோவில், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை மாநில காட்சிகளை விட அங்குத் தேசிய கட்சிகளின் அதிகமே அதிகம். இதனால் அங்குக் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடுமையான போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
.@AIADMKOfficial Allots 20 seats to @BJP4TamilNadu candidate list. #TamilNaduElections2021 #TamilNaduElections #TNAssemblyElections2021 pic.twitter.com/fBa0RNEQHE
— Apoorva Jayachandran (@Jay_Apoorva18) March 10, 2021
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)