'கல்யாணம் கூட பண்ணிக்கல'... '5 கோடி வர செலவு பண்ண ரெடி'... 'திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்த அரசு ஊழியர்'... ஷாக் கொடுத்த கலெக்டர்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Jeno | Mar 10, 2021 04:53 PM

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தை அடுத்த கல்வராயன்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் திலகவதி. இவர் விவசாயத்தில் இளநிலை பட்டம் பெற்றுள்ளார். இவர் தலைவாசல் வட்டார வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமையில், தற்காலிக பணி அடிப்படையில் உதவி தொழில்நுட்ப மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

TN Govt employee sacked for filing nomination to contest polls

இந்நிலையில் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்காடு (தனி) தொகுதியில் போட்டியிட திமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்திருந்தார். இதுகுறித்து பேசிய அவர், ''எனது குடும்பமே திமுக தான். திமுக மகளிரணியில் தொண்டரணி துணை அமைப்பாளராக உள்ளேன். மக்கள் சேவைக்காக நான் திருமணம் கூட செய்து கொள்ளவில்லை.

TN Govt employee sacked for filing nomination to contest polls

விடுமுறை எடுத்துக் கொண்டு தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளேன். தேர்தலில் 5 கோடி வரை செலவு செய்ய என்னால் முடியும்'' என திலகவதி தெரிவித்திருந்தார். இதனிடையே திலகவதி திமுகவில் விருப்ப மனு கொடுத்தது தொடர்பான வீடியோ பதிவு வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேளாண்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

TN Govt employee sacked for filing nomination to contest polls

விசாரணையில் அவர் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அரசுப் பணியில் நன்னடத்தை விதிமுறைகளை மீறியதாக திலகவதியை மாவட்ட ஆட்சியர் ராமன் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

Tags : #ELECTIONS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. TN Govt employee sacked for filing nomination to contest polls | Tamil Nadu News.