'தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல்'... 'தமிழக தேர்தல் தேதியை அறிவித்த தேர்தல் ஆணையம்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாதமிழகத்தில் ஒரே கட்டமாகச் சட்டமன்றத் தேர்தல் நடத்தப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவரும் நிலையில், இன்று மாலை 4.30 மணியளவில் தேர்தல் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில், தமிழகத்தில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் எனவும், மே 2ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் எனத் தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.
அதேபோன்று கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கு ஏப்.6ல் ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி இடைத்தேர்தலும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
மேலும் மே 2ஆம் தேதி தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடிவுகள் வெளியாகும் என இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 88ஆயிரம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருப்பதாகக் கூறியுள்ள தலைமைத் தேர்தல் ஆணையர், தேர்தலைச் சுமுகமாக நடத்துவதில் மருத்துவர்கள், செவிலியர்கள், அதிகாரிகளுக்கு பெரும் பங்கு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்கள்.