‘பரபரக்கும் அரசியல் களம்’!.. தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க யாருக்கு வாய்ப்பு அதிகம்?.. வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கப்போவது யார்? என்பது குறித்து நடந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது.

ஐந்து மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், டைம்ஸ் நவ் மற்றும் சி-ஓட்டர் (Times Now, C-Voter) கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதன்படி 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டமன்ற தேர்தலில், திமுக தலைமையிலான கூட்டணி 152 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும் அதிமுக கூட்டணிக்கு 65 இடங்களும், மக்கள் நீதி மய்யம் 5 இடங்களிலும், அமமுக 3 இடங்களிலும், இதர கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெறும் என கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் திமுக கூட்டணி 43.2% வாக்குகளையும், அதிமுக கூட்டணி 32.1% வாக்குகளையும் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து 30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணி 18 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 12 இடங்களை பிடிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
140 தொகுகளை கொண்ட கேரளாவில், ஆளும் இடதுசாரி ஜனநாயக முன்னணி 82 இடங்களை பிடித்து ஆட்சியை தக்க வைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களையும், பாஜக 1 இடத்தையும், இதர கட்சிகள் 1 இடத்தையும் பிடிக்கும் எனக் கருத்துக்கணிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
294 தொகுகளை கொண்ட மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில், ஆளும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 154 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக 107 இடங்களிலும், காங்கிரஸ்-இடதுசாரி கூட்டணி 33 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
126 தொகுதிகளை கொண்ட அசாம் சட்டமன்ற தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி (பாஜக) 67 இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ் 57 இடங்களையும், இதர கட்சிகள் 2 இடங்களையும் கைப்பற்றும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
