தமிழகத்தில் 'இன்று(மே 2)' அதிகபட்சமாக 231 பேருக்கு 'கொரோனா'!.. 'சென்னையில்' மட்டும் 1000த்தை 'தாண்டியது'! மொத்த எண்ணிக்கை 2757 ஆக உயர்வு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 01, 2020 06:29 PM

தமிழகத்தில் முதல்முறையாக நேற்று (மே-1) ஒரே நாளில் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் அதிகபட்சமாக இன்று (மே -2) தமிழகத்தில் 231 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

TN Corona positive cases updates and chennai toll rises above 1000

இதனால் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 2757 ஆகவும், சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1256 ஆகவும் உயர்ந்துள்ளது.  அதிகபட்சமாக இன்று சென்னையில் மட்டும் இன்று 174 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதனிடையே பேரனிடம் இருந்து கொரோனா தொற்றியதால், சென்னை ஓமந்தூரரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 98 வயது முதியவர் ஒருவர் நேற்றைய தினம் கொரோனாவால் உயிரிழந்தார்.

இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியான எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழப்பு விகிதம் 1.10% ஆகவும் உள்ளது. பாதிப்பு விகிதம் 43 % ஆகவும் உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 52% ஆகவும் உள்ளது.