ஊரடங்கால் தூய்மையான 'புண்ணிய' நதிகள்... அதைவிட இந்த 'அதிசயம்' தான் செம ஹைலைட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டுவர அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் ஏராளமான நன்மைகள் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் காற்றின் மாசு வெகுவாக குறைந்துள்ளது. இதுதவிர கங்கை, யமுனை உள்ளிட்ட நதிகளில் நீரின் தரம் பன்மடங்கு உயர்ந்துள்ளது.
பல்லாண்டுகளாக பல கோடிகள் செலவு செய்தும் சுத்தப்படுத்த முடியாத கங்கை, யமுனை நதிகள் தற்போது தெளிவாக காட்சியளிக்கின்றன. மேலும் நீரில் டால்பின்கள், மீன்கள் ஆகியவை துள்ளிக்குதிக்கும் வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதேபோல தமிழகத்திலும் தாமிரபரணி நீரின் தரமும் தற்போது உயர்ந்துள்ளது.
இந்த நிலையில் கங்கை, யமுனை நதிகளின் நீரானது குடிக்கும் அளவு தரம் உயர்ந்து இருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தொழிற்சாலைகள் மூடப்பட்டதாலும் மனிதர்களால் நடத்தப்படும் சடங்குகள் குறைந்ததாலும் கங்கை, யமுனை நதிகள் தூய்மை அடைந்துள்ளதாகவும், தற்போது குடிப்பதற்கு ஏற்ப நீரின் தரம் உயர்ந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.