அமெரிக்கா 'லேட்டஸ்டா' தான் சொன்னுச்சு... ஆனா தமிழர்கள் 'பல்லாயிரம்' வருஷத்துக்கு முன்னாடியே... மத்திய குழுவை 'வியக்க' வைத்த கபசுரக் குடிநீர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா தொற்று தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் மாநில அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையில் மத்திய அரசின் தேசியப் பேரிடர் மேலாண்மை துறையின் கூடுதல் செயலாளர் டாக்டர் திருப்புகழ் தலைமையில் ஐந்து பேர் கொண்ட குழுவினர் தமிழகத்துக்கு விசிட் வந்துள்ளனர்.
கடந்த சில தினங்களாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்த குழுவினர் பல்வேறு இடங்களுக்கும் ஸ்பாட் விசிட் செய்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த 29-ம் தேதி சென்னை அரும்பாக்கத்தில் உள்ள சித்த மருத்துவ கல்லூரிக்கு விசிட் செய்துள்ளனர். அங்கு தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்துவதில் கபசுரக் குடிநீர் எந்த அளவுக்கு முக்கியமாக செயல்படுகிறது என்பதை ஹோமியோபதி மற்றும் இந்திய மருத்துவப் பிரிவின் கமிஷனர் கணேஷ் ஐ.ஏ.எஸ் மத்திய குழுவினரிடம் விளக்கி சொல்லி இருக்கிறார்.
இதற்கு கபசுர குடிநீரை எப்படி தேர்ந்து எடுத்தீர்கள்? என்று மத்திய குழுவினர் கேட்க, பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வெளியான யூகி வைத்திய சிந்தாமணி என்னும் நூலில் இடம்பெற்ற ஒரு பாடலை கணேஷ் ஐ.ஏ.எஸ் மேற்கோள் காட்டியிருக்கிறார். இதற்கு ஆங்கிலத்தில் விளக்கம் அளித்தபோது பொதுவான நோய் குறிகளுடன் 'சுவை தெரியாது' என்கிற வார்த்தையும் இருப்பதை கேட்டதும் அவர்கள் வியந்து போய் உள்ளனர்.(ஏனெனில் நேற்று தான் அமெரிக்கா அந்த அறிகுறியை வெளியிட்டது)
இதையடுத்து நாங்கள் இதுகுறித்து மத்திய அரசிடம் பேசுகிறோம். கொரோனா தொற்று அதிகமாக இருக்கும் வட மாநிலங்களிலும் இந்த கபசுர குடிநீரை அளிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை சொல்ல, பதிலுக்கு கணேஷ் ஐ.ஏ.எஸ் தேவையான ஸ்டாக் வைத்திருக்கிறோம். நீங்கள் சொன்னால் நாங்கள் சப்ளை செய்கிறோம் என்று தெரிவித்து உள்ளார். தொடர்ந்து அந்த குழுவில் இருந்த அனைவரும் கபசுர குடிநீரை குடித்து இருக்கிறார்கள். இந்த கபசுர குடிநீர் 15 மூலிகைகள் கொண்டு தயாரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.