“அமெரிக்காவை டார்கெட் பண்ணி.. சீன ஆய்வகத்தில் உருவானதுதான் கொரோனா!”.. “எங்கிட்ட ஆதாரம் இருக்கு.. ஆனால்..”.. ட்ரம்ப்பின் வைரல் பேச்சு!
முகப்பு > செய்திகள் > உலகம்உலகையே புரட்டிப் போட்டுக் கொண்டு வரும் கொரோனா நோய்த்தொற்று அமெரிக்காவில் உச்சபட்சமாக உள்ளதைக் காணமுடிகிறது.
இதுவரை 10 லட்சத்துக்கும் மேலானோர் அமெரிக்காவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் நேற்று (ஏப்ரல் 30,2020) ஒரே நாளில் மட்டும் 30 ஆயிரத்து 856 பேருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அமெரிக்காவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 63 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவை குறிவைத்துதான் சீனாவின் ஆய்வுக் கூடத்திலிருந்து கொரோனா உருவாக்கப்பட்டது என்கிற பரவலான சர்ச்சை எழுந்தது. இதனையடுத்து செய்தியாளர்கள் சந்திப்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்பிடம் நிருபர்கள் , “அமெரிக்காவை குறிவைத்து சீனாவில் இருந்து செயற்கையாக உற்பத்தி செய்யப்பட்டதுதான் கொரோனாவா?” என்கிற கேள்வியை முன்வைத்தனர்.
இதற்கு பதிலளித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “ஆமாம். கொரோனா அமெரிக்காவை குறிவைத்து சீனாவின் வுஹான் மாகாணத்தில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதுதான் என்பதற்கான போதுமான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன” என்று கூறி அதிர வைத்தார். மேலும், “அது எப்படி அவ்வாறு கூறுகிறீர்கள்?” என்று நிரூபர்கள் கேட்டபோது “அந்த விபரங்களை தற்போது உங்களிடம் தரமுடியாது” என்று ட்ரம்ப் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் சீனாவின் மீது பொருளாதாரத் தடையை விதிக்க போவதாகவும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.