'கொரோனாவால்' இறந்த 'மருத்துவர்' சைமனின் 'உடல் அடக்கத்தை' தடுத்த 'பெண் உட்பட' 14 பேர் மீது பாய்ந்தது 'குண்டாஸ்'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்

By Siva Sankar | May 01, 2020 10:07 AM

சென்னையில் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் தமிழ்நாட்டையே வருத்தமுறச் செய்தது. 

14 charged in goondas act for restricting to bury chennai doctors body

கொரோனாவுக்கு எதிராக போராடிய மருத்துவர் சைமன் கொரோனா தொற்றினால் உயிரிழந்ததை அடுத்து அவரது உடலை கீழ்ப்பாக்கம் கல்லறையில் புதைப்பதற்க்ய் எதிர்ப்பு தெரிவித்து ஒரு பெண் உட்பட 14 பேர் தாக்குதல் நடத்தினர். 

ஆனால் பின்னர் டாக்டர் சைமனின் மனைவி ஆனந்தி சைமன் வைத்த கோரிக்கைக்கு செவி சாய்த்த பேராயர் அந்த கல்லறையில் சைமனின் உடலை புதைக்க அனுமதி தெரிவித்தார். இந்த நிலையில், மருத்துவர் சைமனின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்த சம்பவத்தில் தாக்குதல் நடத்திய ஒரு பெண் உட்பட 14 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.