"'கூட்டணி'ல இருந்து அவங்க போனது... எங்களுக்கு ஒன்னும் பிரச்சனைய உண்டு பண்ணாது..." 'தமிழக' முதல்வர் 'அதிரடி' கருத்து!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதையடுத்து, அனைத்து கட்சிகளும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், சேலத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அம்மாவட்டத்திலுள்ள தொகுதிகளில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்தார். இதன் பிறகு, அதிமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடைபெற்றது.
அதன் பின்னர் நிருபர்களிடம் பேசிய முதல்வர் பழனிசாமி, 'கூட்டணியில் ஒரே தொகுதியை எல்லா கட்சிகளும் கேட்கும் போது பேசித் தான் தீர்க்க வேண்டும். கூட்டணியில் உடன்பாடு ஏற்படவில்லை என பழி சுமத்துவது தவறு. எங்களின் கூட்டணியில் இருந்து தேமுதிக வெளியேறியதால் நிச்சயமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. பக்குவமில்லாத அரசியலை தேமுதிகவினர் கையாளுகின்றனர். ஒவ்வொரு கட்சிக்கும் தகுதி, வாக்குவங்கி இருக்கிறது. அதற்கேற்றவாறு தான் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும். கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்னர் விமர்சனம் செய்வது சரியல்ல' என தேமுதிக கூட்டணி பிளவு குறித்து முதல்வர் கருத்து கூறியுள்ளார்.
மேலும் பேசிய முதல்வர், 'தேர்தல் வருகிறது என வாக்குறுதி அளிக்கும் கட்சி அதிமுக அல்ல. மக்கள் தேவைகளை அறிந்து தேர்தலுக்கு முன்பாகவே, பயிர்க்கடன், நகைக்கடன் உள்ளிட்டவற்றை தள்ளுபடி செய்துள்ளது' என தெரிவித்தார்.

மற்ற செய்திகள்
