"'ஜெயலலிதா' பிறந்தநாளில்.. 'தீபம்' ஏற்றி 'உறுதிமொழி' எடுங்க..." 'முதல்வர்', 'துணை முதல்வர்' கூட்டாக 'வேண்டுகோள்'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதியன்று, அதிமுக தொண்டர்கள் அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி, இயக்கத்தை காப்பேன் என உறுதி மொழி எடுக்குமாறு முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்த கடிதத்தில், 'மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் ஆன்மா நம் அனைவரின் செயல்களையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறது என்பது எங்கள் அனைவரின் நம்பிக்கை. அவர் உழைப்பாலும், தியாகத்தாலும் உயிரூட்டி வளர்த்த இயக்கத்திற்கு தீங்கு செய்ய நினைப்போரை, அறத்தின் வழி நின்று அழித்தும், ஒழித்தும் அம்மாவின் ஆன்மா இயக்கத்தை காத்து வருகிறது என்பதும் எங்கள் நம்பிக்கை.
விலை கொடுத்தோ, வசைபாடியோ, வசியப்படுத்தியோ இந்த இயக்கத்தை வாங்க முடியாது. எதிரிகளும், துரோகிகளும் கைக்கோர்த்துக் கொண்டு நம் படையை வீழ்த்த வேண்டும் என்ற தீய எண்ணத்தோடு செயல்படத் தொடங்கியுள்ளனர். மக்கள் விரோதிகளுக்கு மீண்டும் ஒரு மாபெரும் பாடத்தை நாம் கற்பிக்க வேண்டும்.
ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 அன்று நீங்கள் (தொண்டர்கள்) ஒவ்வொருவரும் உங்கள் வீடுகளில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஒன்றினை ஏற்றி, கண்களை மூடியவாறு பிரார்த்தனை செய்யுங்கள். மேலும், 'உயிர்மூச்சு உள்ளவரை ஜெயலலிதா வழியில் மக்களையும், மக்களுக்கான இந்த அதிமுக இயக்ககத்தையும் காப்பேன். இது ஜெ, மீது ஆணை' என்ற உறுதிமொழியை எங்களுடன் இணைந்து எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். நூற்றாண்டுகளுக்கும் அன்பை மட்டுமே வளர்த்து, கோட்டையில் நம் கொடியை உயர பறக்கச் செய்வோம்' என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
