VIDEO : 'முதல்வர் வராரு'... 'பரபரப்பான கல்யாண மண்டபம்'... 'முதல்வர் செய்த எதிர்பாராத செயல்'... வியந்துபோன மக்கள்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, சென்னையில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் மணமக்களை வாழ்த்துவதற்கு முன் செய்த செயல் ஒன்று பலரையும் நெகிழ வைத்துள்ளது.
![tn cm unexpected gesture in wedding and people impressed tn cm unexpected gesture in wedding and people impressed](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/tamilnadu/tn-cm-unexpected-gesture-in-wedding-and-people-impressed.jpg)
தமிழக முதல்வர் பழனிசாமி, கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அப்போது தமிழக மக்களிடையே, அதிக நேரம் செலவழித்து அவர்களுடன் அன்பு செலுத்தியும், ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் செய்து வருகிறார்.
இந்நிலையில், சென்னை ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் வைத்து மணமக்கள் ராம் - பவானி ஆகியோரின் திருமணம் நடைபெற்றது. மிகவும் தடல் புடலாக நடந்த இந்த திருமண நிகழ்ச்சியில், தமிழக முதல்வர் பழனிசாமி, முதல்வருக்கான எந்தவொரு தோரணையுமில்லாமல் சாதாரணமாக சென்றார். அது மட்டுமில்லாமல், மணமக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதற்கு முன் செய்த செயல் ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
நேராக மேடைக்கு சென்ற முதல்வர், தனது செருப்பை மேடையின் அருகே கழற்றி போட்டு விட்டு அதன் பிறகு மணமக்களை வாழ்த்தியுள்ளார். மேடையில் நின்ற அனைவரும் காலில் ஷூ, செருப்பு என போட்டுக் கொண்டு நிற்க, செருப்பைக் கழற்றிப் போட்டுக் கொண்டு முதல்வர் வாழ்த்தியதை பலரும் பாராட்டி வருகின்றனர். தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது கால்களில் செருப்பு போடக்கூடாது என்பது மரியாதை. அதனை சிறப்பாக கடைபிடித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
முன்னதாக, சில தினங்களுக்கு முன் முதல்வரை பார்த்து ஆசீர்வாதம் வாங்க சாலையோரம் புதுமண தம்பதிகள் காத்திருந்த நிலையில், காரில் இருந்து இறங்கிய முதல்வர் பழனிசாமி, செருப்பை கழற்றி ஓரம் வைத்து விட்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)