"இங்க சாதி இல்ல, மதமும் இல்ல... எல்லாருக்கும் பாதுகாப்பா நாங்க இருப்போம்..." 'தமிழக' முதல்வர் அதிரடி 'கருத்து'...
முகப்பு > செய்திகள் > தமிழகம்திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது மேடையில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'சிலர் மதத்தின் அடிப்படையிலும், ஜாதியின் அடிப்படையிலும் வாக்குகள் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். அது மட்டுமில்லாமல், ஜாதி, மத ரீதியிலும் மக்களிடையே சிலர் பிரிவினையை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள்.
ஆனால், அதிமுகவை பொறுத்தவரை, மதத்தை பார்த்து ஆட்சி செய்யும் அரசு அல்ல. அதே போல, ஜாதி பார்க்கும் கட்சி அதிமுக கிடையாது. எம்.ஜி.ஆர் ஆட்சியிலும் சரி, ஜெயலலிதா ஆட்சியிலும் சரி, ஆண் மற்றும் பெண் என்ற இரண்டு ஜாதி மட்டும் தான் இருந்தது. அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் அதிமுக அரசு பாதுகாப்பானதாக இருக்கும். அதில், எந்தவொரு மாற்றுக் கருத்தும் கிடையாது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் அதிமுக அரசு தொடர்ந்து பயணிக்கும்.
இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கை பேணிக் காப்பதில் முதல் மாநிலமாக திகழும் தமிழகம், அமைதி பூங்காவாக நிலவிக் கொண்டிருக்கிறது' என முதல்வர் பழனிச்சாமி பேசினார்.

மற்ற செய்திகள்
