"இத மட்டும் தவறாம கரெக்டா செஞ்சுருங்க.." 'தேர்தல்' பிரச்சாரத்திற்கு நடுவே... 'தமிழக' முதல்வரின் 'முக்கிய' கோரிக்கை!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால், அனைத்து கட்சிகளும், தேர்தலுக்காக தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 10 தொகுதிகளில் இன்று தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது, ஒவ்வொரு தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தின் இறுதியில், தன்னுடைய உரையை முடிப்பதற்கு முன்னர், பொது மக்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளையும் அவர் முன் வைத்து வருகிறார்.
கடந்த ஆண்டு பரவ ஆரம்பித்த கொரோனா தொற்று, தமிழகத்தில் மெல்ல மெல்ல குறைந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக மீண்டும் வேகமெடுத்துள்ளது. மேலும், கடந்த ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும், கொரோனா தடுப்பூசியும் ஒவ்வொரு கட்டமாக மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்திலும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வரும் நிலையில், கொடிய தொற்றில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள, அனைவரும் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டு, தங்களை காத்துக் கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் பழனிசாமி, மக்களிடையே அறிவுறுத்தி வருகிறார்.
தேர்தல் நேரத்தில், பிரச்சார பணிகளில் மட்டும் கவனம் செலுத்தாமல், மக்களின் நலனையும் கவனத்தில் கொண்டு, கொரோனா தடுப்பூசிக்கான அவசியம் பற்றியும் மக்களிடையே முதல்வர் எடுத்துரைத்து வருவது குறிப்பிடத்தக்கது.