"'குடும்ப' தலைவிகளுக்கு மாதந்தோறும் 1500 'ரூபாய்'... 'மகளிர்' தினத்தில் 'தமிழக' முதல்வரின் அதிரடி அறிவிப்பு!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலை முன்னிட்டு தீவிரமாக தயாராகி வருகிறது.

இந்நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல், தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து, சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று மாலை ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்திற்கு பின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பேசிய முதல்வர் பழனிசாமி, 'அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தில் உள்ள குடும்ப தலைவிகள் அனைவருக்கும் மாதந்தோறும் தலா 1,500 ரூபாய் வழங்கப்படும். அதிமுகவின் இந்த அறிவிப்பு, முன் கூட்டியே கசிந்ததால் திமுக அறிவித்து விட்டது. அதே போல, ஆண்டு தோறும், ஒரு குடும்பத்திற்கு, 6 சமையல் எரிவாயு சிலிண்டர்கள் இலவசமாக அளிக்கப்படும். மக்களை மகிழ்ச்சிப்படுத்தும் விதத்திலான அதிமுக தேர்தல் அறிக்கை, விரைவில் வெளியிடப்படும்' என கூறினார்.
மேலும் 'அமமுக' கட்சியுடனான கூட்டணி குறித்து நிருபரின் கேள்விக்கு பதிலளித்த முதல்வர், 'அதிமுக - அமமுக இணைப்புக்கு சாத்தியமில்லை என்பதை மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துக் கொள்கிறேன்' என அவர் கூறினார்.

மற்ற செய்திகள்
