"வெற்றிநடை போடும் தமிழகமே..." அசத்தல் 'ஐடியா'வுடன் வேற 'லெவலில்' வைரலாகும் 'தமிழக' முதல்வரின் 'ஃபோட்டோ'!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலை முன்னிட்டு அனைத்து தமிழக கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்நிலையில், மாமல்லபுரம் கடற்கரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் 160 அடி உயர மணல் சிற்பம் ஒன்றை வடிவமைத்துள்ளனர். 'எடப்பாடியார் 2021' என்ற கோஷத்தை முன்வைத்து இந்த மணல் சிற்பம் பிரமாண்டமான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
மொத்தம் 50 மணல் சிற்ப கலைஞர்களைக் கொண்டு, 50 டன் மணல்களை பயன்படுத்தி, மிகவும் தத்ரூபமாக இதனை அவர்கள் வடிவமைத்துள்ளனர். சுமார் 10 நாட்கள், இதற்காக பணிகள் நடைபெற்ற நிலையில், இந்த மணல் சிற்பத்தை தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் விரைவில் திறந்து வைக்கவுள்ளார்.
#வெற்றிநடை_போடும்_தமிழகமே pic.twitter.com/M4uPgSA76c
— Aji. (@Aji91790039) February 11, 2021
மேலும், இந்த மணல் சிற்பம் ஒரு வாரம் மக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளது.

மற்ற செய்திகள்
