'பிள்ளைங்க நல்லா படிச்சா போதும்'... 'மாணவர்களுக்கான அசத்தலான திட்டம்'... தொடங்கிவைத்த முதல்வர்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா தொற்று பரவலின் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் ஆன்லைன் மூலம் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு நாள்தோறும் கட்டணமில்லா 2 ஜிபி இலவச டேட்டா வழங்கும் திட்டத்தை சில தினங்களுக்கு முன் அறிவித்திருந்தது. இந்த திட்டத்தை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தலைமை செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார்.
கோவிட் தொற்றால் கல்லூரிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இணையவழி வகுப்புகள் மூலம் கல்வி கற்கும் 9,69,047 அரசு, அரசு உதவிபெறும் சுயநிதி கல்லூரி மாணாக்கர்களுக்கு பிப்ரவரி-மே வரை, எல்காட் நிறுவனம் மூலம் விலையில்லாமல் நாளொன்றுக்கு 2GB Data வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தேன். pic.twitter.com/9N8mVkVWwv
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 1, 2021
அதன்படி, அரசு உதவி பெறும் கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள், பாலிடெக்னிக் மாணவர்கள் தினமும் 2 ஜிபி டேட்டாவைப் பெறுவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படி, சுமார் 9 லட்சத்து 69 ஆயிரம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மற்ற செய்திகள்
