தமிழகத்தின் ’அனல் பறக்கும்’ அரசியல் சூழலில்... திடீரென ‘மன்னிப்பு’ கேட்டு... பரபரப்பை கிளப்பிய ஆ ராசா... - நடந்தது என்ன??? - விவரம் உள்ளே!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தனது அரசியல் கருத்திற்கு திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா மன்னிப்பு கேட்டு விளக்கமளித்துள்ளார்.

தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தின் அனைத்து மாநிலங்களிலும், தேர்தல் பிரச்சாரம் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில், திமுக சார்பில் பிரச்சாரத்தின் போது பேசிய, ஆ. ராசா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் பற்றி தவறான கருத்து ஒன்றைக் குறிப்பிட்டு பேசியிருந்தார். அவரின் இந்த கருத்து, அதிமுக கட்சி மற்றும் தொண்டர்கள் மத்தியில், அதிகம் கோபத்தை உருவாக்கியது.
பெண்களை நாகரீகமற்ற முறையில் தரக்குறைவாக பேசும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக தாய்மார்கள் நிலை என்னாவது.?#திமுகவிற்கு_முற்றுப்புள்ளி_வைப்போம் pic.twitter.com/W9zAgHJbGY
— AIADMK (@AIADMKOfficial) March 29, 2021
ஆ. ராசாவுக்கு எதிராக கண்டனங்கள் அதிகம் எழுந்தன. இதனையடுத்து, நேற்று சென்னையில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் பழனிசாமி, திமுகவைச் சேர்ந்த ஆ. ராசாவின் தனது தாயார் குறித்து சர்ச்சை பேச்சு தொடர்பாக, பேச முயற்சித்த போது, பேச்சு வராமல் மக்கள் முன்னிலையில் கண் கலங்கினார்.
முதல்வர் கண் கலங்கியது அங்கிருந்த பொது மக்களிடையேயும் வேதனையை உண்டு பண்ணியது. இந்நிலையில், திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா, முதல்வர் குறித்து தான் பேசிய கருத்திற்கு மன்னிப்பு கேட்டுள்ளார்.
'எனது பேச்சிற்கு நான் மனம் வருந்துகிறேன். என்னால், முதல்வர் கண் கலங்கினார் என்பதை அறிந்து, நான் அதிகம் மன வேதனையடைந்தேன். இதனால், எனது அடி மனதில் இருந்து, நான் கூறிய கருதிற்காக முதல்வரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்
