'வாடகை கேட்டதால் வெறியாகி...' 'ஜன்னல், கதவு, சிசிடிவி எல்லாத்தையும் அடிச்சு தொம்சம் பண்ணி...' - தீ வைத்து கொளுத்திய பெண்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கடந்த பல மாதங்களாவே நிறுத்திவைக்கப்பட்டிருந்த வாடகை பாக்கியை கேட்டதால், வீட்டுக்கு தீ வைத்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த எஸ்.சுரேஷ்குமார் (40) வெள்ளக்கோவில் காங்கயம் சாலை பாலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி அருகில் கணபதி ஸ்பின்னர்ஸ் எதிரில் சொந்தமாக இடம் வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இந்நிலையில் அவரது வீட்டிற்கு வெள்ளக்கோவில் சீரங்கராயகவுண்டன்வலசு பாரதியார் நகரைச் சேர்ந்த ராஜ்கபூர் மற்றும் அவரது மனைவி கலைவாணி தம்பதிகள் அட்வான்ஸ் 30 ஆயிரம் ரூபாய் கொடுத்து, வாடகை மாதம் ரூ.3,000 என பேசி கடந்த வருடம் குடிபுகுந்துள்ளனர்.
மேலும் குடிவந்த நாளில் இருந்து ஒவ்வொரு மாதமும் வாடகை பணத்தை தாமதமாக கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதமாக சுத்தமாக வாடகை தராமல் ஏமாற்றி வந்துள்ளனர் ராஜ்கபூர் மற்றும் அவரது மனைவி கலைவாணி. இதன் காரணமாக வீட்டு உரிமையாளர் சுரேஷ் வீட்டைக் காலி செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த கலைவாணி அவர் குடியிருந்த வீட்டின் ஜன்னல் கதவு மற்றும் எலக்ட்ரிக் பொருள்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளார். மேலும் வீட்டின் வெளியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா போன்றவற்றைச் சேதப்படுத்தி தீ வைத்து விட்டுச் சென்று விட்டார்.
இதனால் பாதிப்படைந்த வீட்டின் உரிமையாளர் சுரேஷ் கலைவாணி மீது புகார் அளித்துள்ளார். புகாரை எடுத்துக்கொண்ட வெள்ளக்கோவில் காவல்துறையினர் கலைவாணி மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.