'ரேப் பண்ண முடியலன்னு ஆத்திரமாகி...' '14 வயது சிறுமியை தீ வைத்த இளைஞர்கள்...' 'அதுல ஒரு ஸ்கூல் பையனும் உண்டு...' பதபதைக்க வைக்கும் குரூரம்...!
முகப்பு > செய்திகள் > இந்தியாசத்தீஸ்கரில் 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முடியாததால் இரு இளைஞர்கள் சேர்ந்து சிறுமியை தீ வைத்து கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சத்தீஸ்கரின் பெமேதாரா மாவட்டத்தில் 7 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி ஒருவர் ஜூன் 22 அன்று தனது வீட்டிலிருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள ஒரு வயலில் தனியாக இருந்துள்ளார். அதனை கண்ட இருவர் அப்பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்க கட்டாயப்படுத்தி உள்ளனர்.
ஆனால் சிறுமி தனது பலத்தை எல்லாம் பிரயோக படுத்தி அவரை காத்துகொண்டு சத்தம் போட்டு கதறியுள்ளார். அதனால் ஆத்திரமடைந்த இரு நபர்கள் சிறுமியின் மீது தீ பற்ற வைத்து அங்கிருந்து தப்பித்து சென்று விட்டனர்.
சிறுமியின் குடும்பத்தார் வீட்டில் தன் மகள் இல்லாததால் அக்கம் பக்கத்தில் தேடும் பணியில் ஈடுபட்டிருந்த போது, 80 சதவீத தீக்காயங்களுடன் சிறுமி உயிருக்கு போராடி வந்ததை பார்த்து பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று, போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
சிறுமியின் மரண வாக்குமூலத்தில், வயலில் தனியாக இருந்த தன்னிடம் இருவர் தவறாக நடக்க முயற்சித்ததாகவும் அதில் ஒருவர் சிறுமியின் பள்ளியில் உயர்க்கல்வியில் படிக்கும் மாணவர் எனவும் கூறியுள்ளார்.
சிறுமியை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய ஒரு இளைஞர் மற்றும் மற்றொரு மைனர் சிறுவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ்வழக்கு பதிவு செய்து கைது செய்துள்ளனர் பெமேத்ரா போலீசார்.
துரதிஷ்டவசமாக நேற்று (புதன்கிழமை) 80 சதவீத தீக்காயத்துடன் சிறுமி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மற்ற செய்திகள்
