‘நீங்கதான் தீர்வு சொல்லணும் ஐயா’!.. தங்கச்சிக்காக ‘விஜய் ரசிகர்’ முதல்வரிடம் வைத்த உருக்கமான கோரிக்கை.. இன்ப அதிர்ச்சி கொடுத்த திருப்பூர் கலெக்டர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்முதல்வர் பழனிசாமிக்கு டுவிட்டரில் விஜய் ரசிகர் ஒருவர் வைத்த கோரிக்கையைப் பார்த்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் உதவ முன்வந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த தீவிர விஜய் ரசிகர் ஹரி, வாத்தி ரெய்டு என்ற புனைப்பெயரில் டுவிட்டர் கணக்கு வைத்துள்ளார். இந்த நிலையில் ஹரி தனது டுவிட்டர் பக்கத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு உருக்கமான கோரிக்கை ஒன்றை வைத்திருந்தார்.
அதில், ‘ஐயா முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, என் தங்கச்சி திருப்பூர்ல தனியார் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறாள். அவளுக்கு இன்னைக்கு அரையாண்டுதேர்வு. கடந்த ஆண்டிலிருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை. அதனால் பள்ளியிலிருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை. அவளுக்கான பாடமும் நடத்தப்படவில்லை.
ஐயா @CMOTamilNadu என் தங்கச்சி திருப்பூர்ல செயின்ட் ஜோசப் ஸ்கூல் ல ஏழாம் வகுப்பு படிக்கிறாள் அவளுக்கு இன்னைக்கு அரையாண்டுதேர்வு.. கடந்த ஆண்டிலிருந்து எங்க அப்பா சரியில்லாத காரணத்தினால் பள்ளி கட்டணம் செலுத்த முடியவில்லை.. அதனால் பள்ளியிலிருந்து தேர்வுக்கான லிங்க்கை அனுப்பவில்லை.
— 😎Vaathi Raid😎🔥🔥🔥 (@hari2402) February 16, 2021
இதனால் இன்று தேர்வு எழுத முடியாமல் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறாள். அரசு பள்ளியில் சேர்க்கலாம் என்று பார்த்தால் கட்டணம் செலுத்தாமல் TC தர மாட்டிங்கராங்க. இதற்கு நீங்கள் தான் தீர்வு சொல்ல வேண்டும் ஐயா’ என உருக்கமாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதில் அளித்த திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்தியேன், முழு தகவலை கூறுங்கள் என்று கேட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். தற்போது ஹரியின் தங்கைக்கு தேர்வு எழுதுவதற்கான லிங்க் அனுப்பட்டுள்ளதாக கலெக்டர் விஜயகார்த்திகேயன் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
Student got the link 👍🏼👍🏼
— Vijayakarthikeyan K (@Vijaykarthikeyn) February 17, 2021
இதைப் பார்த்த மக்கள் பலர் திருப்பூர் கலெக்டர் விஜயகார்த்தியேனை பாராட்டி வருகிறார்கள்.