முகேஷ் அம்பானி ‘RIGHT HAND’.. வெற்றிக்கு மூளையாக செயல்படும் ‘ஓர் நபர்’.. அதிகம் வெளியே தெரியாத இவர் யார்..?

முகப்பு > செய்திகள் > வணிகம்

By Selvakumar | Jun 13, 2020 08:57 AM

ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் முகேஷ் அம்பானி பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. ஆனால் அவரது வெற்றிக்கு பின்னால் உள்ள மனோஜ் மோடி பலருக்கு தெரிய வாய்ப்பில்லை.

Mukesh Ambani right hand Manoj Modi behind Big deals for Reliance Jio

ரிலையன்ஸ் குழுமத்தின் இயக்குநராக உள்ள மனோஜ் மோடியை இந்தியாவிற்கு வெளியே உள்ள ஒரு சிலருக்கு மட்டுமே தெரியும். முகேஷ் அம்பானியின் வலதுகரமான இவர், ஜியோவில் குவிந்துள்ள மெகா முதலீடுகளுக்கு காரணமாக உள்ளவர். பேஸ்புக் நிறுவனம் ஜியோவில் ரூ. 43,574 கோடி முதலீடு செய்ததற்கு பின்புலமாக இருந்தவர் மனோஜ் மோடிதான் என்று கூறப்படுகிறது.  அம்பானி பெட்ரோ கெமிக்கலில் சந்தையில் இருந்து இணைய தொழில் நுட்பங்களுக்கு மாறியதற்கு மனோஜ் மோடியின் யோசனையும் ஒரு காரணம் சொல்லப்படுகிறது.

இவர் தனிப்பட்ட நிகழ்ச்சிகளிலோ, நேர்காணல்களிலோ கலந்து கொள்வது அரிதிலும் அரிது. கார்ப்பரேட் நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்துள்ள ஒரு சில பிரபலங்களில், மீடியா வெளிச்சத்துக்கு தெரியாவதவர்களில் மனோஜ் மோடியும் ஒருவர். முகேஷ் அம்பானிக்கும், மனோஜ் மோடிக்கும் இடையே உள்ள உறவு தொழில்துறையில் உள்ளவர்களுக்கு நன்றாக தெரிய வாய்ப்புள்ளது.

மாநாடு ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மனோஜ் மோடி, ‘எனக்கு எந்த ராஜதந்திரமும் தெரியாது. நிறுவனத்தில் பணிபுரிபவர்களுக்கு பயிற்சி அளிக்கிறேன். அவர்களை கண்காணித்து வழிநடத்துகிறேன். இதன் மூலம் பல்வேறு காரியங்கள் வெற்றிகரமாக முடிகிறது’ என கூறியுள்ளார். ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஒவ்வொரு தொழில் ஒப்பந்தமும் முடிவு செய்யப்படுவதில் மனோஜ் மோடிக்கு பெரிய பங்கு உள்ளதாக கூறப்படுகிறது. அவருடன் ஆலோசனை கூட்டம் நடந்துவிட்டால் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகிவிடும் என பலர் நம்புகின்றனர்.

ஜியோவில் முதலீடு செய்துள்ள ஏர் டெக்கான் நிறுவனரான கோபிநாத், மனோஜ் மோடி பற்றி தெரிவிக்கையில், ‘அவர் ரிலையன்ஸ் நிறுவனத்தில் இந்த இடத்தை அடைந்ததற்கு அவரது விஸ்வாசம் மட்டும் காரணமல்ல. மிகவும் புத்திசாலித்தனமாக யோசிப்பதும், திறமையாக பேச்சுவார்த்தை நடத்துவதிலும் கெட்டிக்காரர் என்பதும் முக்கிய காரணம். ரிலையன்ஸில் மற்ற நிறுவனங்களை முதலீடு செய்ய வைப்பதில் அவர் மிகவும் திறமையாக கையாளக்கூடியவர். நவீன தொழில்நுட்பத்தை புரிந்து கொள்ளக்கூடிய நுண்ணறிவு உடையவர்’ என பாராட்டியுள்ளார்.

1980களில் அம்பானியின் தந்தை எண்ணெய் மற்றும் கெமிக்கல் நிறுவனத்தை உருவாக்கிய போது நிறுவனத்தில் இடம்பெற்றிருந்த ஒரு சிலரில் மனோஜ் மோடியும் ஒருவர். அம்பானியும், அவரும் மும்பையில் உள்ள வேதியியல் தொழில்நுட்பத்துறை ஒன்றில் படிக்கும் போது நெருங்கிய நண்பர்களாக மாறியிருக்கிறார்கள். இந்த உறவு அம்பானி குடும்பத்தின் மூன்று தலைமுறையினருக்கும் பணியாற்றுவதற்கான வாய்ப்பை அவருக்கு கொடுத்துள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Mukesh Ambani right hand Manoj Modi behind Big deals for Reliance Jio | Business News.