'எனக்கும் வயிறுன்னு ஒண்ணு இருக்கு'... 'சுத்தமா காசும் இல்ல'... 'பிரபல கார் ரேஸ் வீராங்கனையின் ஷாக்கிங் முடிவு'... பரபரப்பு சம்பவம்!
முகப்பு > செய்திகள் > உலகம்வருமானம் இல்லாத நிலையில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கார் ரேஸ் வீராங்கனை ஆபாசப் பட நடிகையாக மாறியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிரபல கார் பந்தய வீராங்கனை ரினி கிரேசி. 25 வயதான இவர், பல கார் ரேஸ் பந்தயங்களில் பங்கேற்றுப் பல பரிசுகளை அள்ளியுள்ளார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், கார் பந்தயம் போன்ற போட்டிகள் நடைபெறவில்லை. இதனால் அவருக்கு வருமானமும் சுத்தமாக நின்று போனது.
இந்த சூழ்நிலையில் தான் அவருக்கு, ஆபாசப் படங்கள் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றிலிருந்து அழைப்பு வந்தது. முதலில் அந்த அழைப்பைக் கேட்டு கொஞ்சம் ஆடிப் போன ரினி, பின்னர் அதற்குச் சம்மதம் தெரிவித்தார். அதிகப் பணம் தருவதாக அந்த நிறுவனம் கூறிய நிலையில், சில படங்களில் நடித்து முடித்துள்ளார். தற்போது அவருக்கு அதிகமாகப் பணம் புரளும் நிலையில், தொடர்ந்து ஆபாசப் படங்களில் நடிக போவதாகக் கூறியுள்ளார்.
இதுகுறித்து பேசிய அவர், ஆபாசப் படங்களில் நடிக்க நான் எடுத்த முடிவு சரியானது என்று உணர்கிறேன். இதில் நடிக்க ஆரம்பித்தபிறகு நிறையச் சம்பாதிக்கிறேன். ஊரடங்கால் எனக்கு வருமானம் இல்லாமல் இருந்தது. எனக்கும் பசி என்று ஒன்று உண்டு. தற்போது எனக்குக் கிடைத்துள்ள பணம் எனது வாழ்க்கைக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சில ஆண்டுகள் தொடர்ந்து ஆபாசப் படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறேன். ஆபாச நடிப்பு தொழில் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது" எனக் கூறியுள்ளார்.
ரினி கிரேசியின் இந்த முடிவு கார் ரேஸ் ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வருமானம் இல்லாத நிலையில் பிரபல கார் ரேஸ் வீராங்கனையே இந்த முடிவை எடுத்துள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
