கொரோனாவில் இருந்து 'மீண்டவருக்கு' ஆம்புலன்ஸ் மறுப்பு... 8 மணி நேரம் 'ஆட்டோ' ஓட்டி வீட்டில் சேர்த்த பெண்... நேரில் 'வெகுமதி' வழங்கிய முதல்வர்!
முகப்பு > செய்திகள் > இந்தியாகொரோனா வைரஸில் இருந்து மீண்டவரை வீட்டில் சேர்த்த பெண் ஓட்டுநருக்கு முதலமைச்சர் ஊக்கத்தொகை வழங்கினார்.

மணிப்பூர் மாநிலம் கம்ஜாங் மாவட்ட அரசு மருத்துவமனையில் கொரோனாவில் இருந்து மீண்ட நபர் ஒருவர் வீட்டுக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளார். அவரது வீடு வேறு ஒரு மாவட்டத்தில் இருந்ததால் அவருக்கு ஆம்புலன்ஸ் வசதி மறுக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் அவர் மிகுந்த வருத்தத்தில் இருந்துள்ளார். இதையறிந்த பெண் ஆட்டோ ஓட்டுநர் லய்பி ஒய்னம் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். கடந்த 31-ம் தேதி இரவு அவரை அழைத்துக்கொண்டு புறப்பட்ட ஒய்னம் 8 மணி நேரம் ஆட்டோ ஓட்டி காலையில் அந்த நபரை அவரது வீட்டில் சேர்த்துள்ளார்.
இதையறிந்த மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங், லய்பி ஒய்னத்தை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். அத்துடன் சமூக ஆர்வலர்கள் மற்றும் தொழில்முனைவோர்கள் வழங்கிய ரூபாய் 1,10,000 ரூபாயையும் அவருக்கு ஊக்கத்தொகையாக வழங்கி இருக்கிறார். 2 மகன்களுக்கு தாயான ஒய்னம் தன்னுடைய வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
