ஆற்றில் குளிக்க போன மனைவி வீடு திரும்பல.. நைட் முழுக்க தேடிய கணவன்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்ற பெண் கை, கால்கள் கட்டப்பட்டு அரை நிர்வாண கோலத்தில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள திருமலை கொழுந்துபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைக்கண்ணு. இவரது மனைவி மாதா (வயது 50). இவர் நேற்று மாலை வீட்டின் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் இரவு வெகு நேரமாகியும் மாதா வீடு திரும்பவில்லை. இதனை அடுத்து இரவு முழுவதும் கணவர் சுடலைக்கண்ணு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் ஆற்றின் அருகில் முட்புதரில் மாதா கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் அரை நிர்வாண கோலத்தில் சடலமாக கிடப்பதாக அப்பகுதி மக்கள் கூறியுள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தத சுடலைக்கண்ணு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், மாதாவின் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் கட்ட விசாரணையில் மாதாவை மர்ம நபர் யாரோ அடித்து கொன்றிருக்கலாம் என தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். நேற்று மாதா வழக்கம்போல் வேலையை முடித்து விட்டு அருகே உள்ள ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். குளித்து விட்டு வரும் வழியில், யாராவது தாக்கியிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
மேலும் சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும், தடயவியல் துறையினரும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். ஆற்றில் குளிக்க சென்ற மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
