டான்சருடன் உருவான காதல்.. லவ்வர்'ன்னு நம்பி கூல் டிரிங்க்ஸ் குடிச்சதில் பெண்ணுக்கு வந்த வினை.. பதற வைக்கும் சம்பவம்
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையை அடுத்த மாடம்பாக்கம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் வினோதா (வயது 28). இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு, வினோதாவின் தம்பியான வினோத், நடனப்பள்ளி ஒன்றில் சேர்ந்துள்ளார். அந்த நடனப்பள்ளியின் ஆசிரியர் பிரபு, வினோத்துடன் நண்பராகவும் இருந்து வந்துள்ளார்.
இதன் மூலம், பிரபுவும், வினோதாவும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகியுள்ளனர். இந்த பழக்கம் நாளடைவில் காதலாகவும் மாறியுள்ளதாக கூறப்படுகிறது.
கூல் டிரிங்க்ஸ்
இதனைத் தொடர்ந்து, கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தன்னுடைய வளர்ப்பு தாய்க்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி, கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள கிராமம் ஒன்றிற்கு, வினோதாவை பிரபு அழைத்துச் சென்றுள்ளார். அங்குள்ள வீட்டில் இருவரும் இருந்துள்ள நிலையில், வினோதாவுக்கு, கூல் டிரிங்க்ஸ் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களைக் கொடுத்துள்ளார் பிரபு.
சண்டை போட்ட பெண்
இந்நிலையில், கூல் டிரிங்க்ஸ் குடித்த இளம் பெண், மயக்கம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனை பயன்படுத்திக் கொண்ட பிரபு, அந்த பெண்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதனிடையே, தன்னிடம் பிரபு தவறாக நடந்து கொண்டது பற்றி, விவரம் தெரிய வந்த நிலையில், சண்டை போட்டுள்ளார் வினோதா. ஆனால், அவரை சமாதானம் செய்த பிரபு, திருமணம் செய்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
மிரட்டிய தாய்
இதன் பின்னர் இருவரும், அடிக்கடி தனிமையில் சந்தித்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில், தனிமையில் இருக்கும் சில வீடியோக்களையும், பிரபு எடுத்து வைத்துள்ளார். ஒரு கட்டத்தில், பிரபுவின் தாயாருக்கும், இந்த விவகாரம் தெரிய வந்துள்ளது. அவர் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு எடுத்துள்ளார். அது மட்டுமில்லாமல், அவர் வரதட்சணை கேட்டு மிரட்டவும் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
திருமணம் பெயரில் மோசடி
மேலும், பதிவு திருமணம் செய்து கொள்ள, 1 லட்ச ரூபாய் செலவாகும் என்றும், பிரபுவின் தாயார் கூறியுள்ளார். இதற்காக, வினோதாவும் 80 ஆயிரம் ரூபாயை கூகுள் பே மூலம் அனுப்பி வைத்துள்ளார். திருமணம் நடத்த வேண்டி, ராயபுரம் பகுதியிலுள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கும் சென்றுள்ளனர். ஆனால், சில காரணங்களை சொன்ன பிரபுவின் தாயார், அருகேயுள்ள கோவிலில் வைத்து, இருவருக்கும் மாலையை மட்டும் மாற்றியுள்ளார்.
பணம் வேண்டும்
இதனிடையே, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக வினோதா கர்ப்பம் அடைந்துள்ளார். இது பற்றி பிரபுவிடம் வினோதா கேட்டுள்ள நிலையில், 100 சவரன் நகை மற்றும் 10 லட்சம் ரூபாய் பணம் தர வேண்டும். அப்போது தான் நமக்கு திருமணம் நடக்கும், இல்லையென்றால் உன்னோடு தனிமையில் இருந்த வீடியோ அனைத்தையும் இணையத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் பிரபு மிரட்டியுள்ளார்.
இளம் பெண் புகார்
இதனால், மனமுடைந்த வினோதா, போலீசில் புகார் அளிப்பதே ஒரே வழி என முடிவு செய்துள்ளார். அதன்படி, அவரும் புகாரளிக்க, வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரபுவை கைது செய்துள்ளனர். மேலும், பிரபுவின் தாயிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து, இருவரிடமும் போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், வினோதாவை போல வேறு பெண்களிடம் பிரபு தவறாக நடந்திருக்கக் கூடுமா என்ற கோணத்திலும், விசாரித்து வருகின்றனர்.

மற்ற செய்திகள்
