பாசமாக பழகுவதுபோல் நடித்த பெண்.. நம்பிய ரியல் எஸ்டேட் அதிபருக்கு நேர்ந்த அதிர்ச்சி! திருச்சி அருகே பரபரப்பு..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பாசமாக பழகுவது போல் நடித்து தொழிலதிபரை பெண் ஒருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி திருவளர்ச்சோலை பகுதியை சேர்ந்தவர் ஜோசப் வல்லவராஜ். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் இவர், நண்பருடைய தோப்பு ஒன்றையும் பராமரித்து வருகிறார். மனைவியை இழந்த இவருக்கு ஹோட்டலில் வேலை செய்து வந்த சுந்தரி என்ற பெண்ணுடன் அறிமுகமாகியுள்ளது. இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர்.
நாளடைவில் ஜோசப் வல்லவராஜூம், சுந்தரியும் நெருங்கி பழக ஆரம்பித்துள்ளனர். ரியல் எஸ்டேட் தொழிலில் பணம் அதிகமாக வருவதை அறிந்த சுந்தரி, தனது நண்பர்களுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி இருவரும் வெளியே செல்வோம் என கூறி, ஜோசப்பை காரில் அழைத்து வந்துள்ளார். பின்னர் தனது கூட்டாளிகளை வரவழைத்த சுந்தரி, ஜோசப்பை மிரட்டி கூகுள் பே மூலம் ஒரு லட்சம் ரூபாயை பறித்துள்ளார். மேலும் ஒரு கோடி ரூபாய் கேட்டு அவரை கடத்திச் சென்றுள்ளார்.
இந்த சூழலில் மாந்துறை அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஜோசப் கூச்சல் போட்டுள்ளார். இதைக் கேட்டு வந்த போலீசார், ஜோசப்பை காரில் கடித்திய கும்பலை கைது செய்தனர். இதனிடையே காரில் இருந்து தப்பி ஓடிய சுந்தரியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பாசமாக பழகுவது போல் நடித்து ரியல் எஸ்டேட் தொழில் அதிபரை பெண்ணொருவர் ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்
