"தோழிக்கு ஹாப்பி பர்த்டே".. டான்ஸ் ஆடும்போது பூமி பிளந்து உள்ளே விழுந்த பெண்கள்.. பதைபதைக்க வைத்த சம்பவம்.!
முகப்பு > செய்திகள் > தமிழகம்டிக் டாக் வீடியோ ஒன்றில், நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் சிலர் திடீரென பூமி பிளந்து கொண்டதால் குழிக்குள் விழுந்த சம்பவம் வீடியோவாக வைரலாகி பரவி வருகிறது.

தற்காலத்தில் இணையதளம் வந்து விட்டதால் உலகம் முழுவதும் நடக்கக்கூடிய ஆச்சரியமான மற்றும் அதே சமயம் ஆபத்து விளைவிக்கக்கூடிய விஷயங்களை பலரும் எங்கிருந்தாலும் தெரிந்து கொள்ள முடிகிறது. உலகத்தில் எங்கு எது நடந்தாலும் முந்தைய காலங்களில் சில நாட்கள் கழித்து தெரிந்து கொள்ள முடியும் என்கிற சூழல் போய், தற்போது டிஜிட்டல் உலகத்தில் அவ்வப்போதே தெரிந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு உண்டாகி இருக்கிறது.
நிலநடுக்கமோ, நிலச்சரிவோ, இயற்கை பேரிடரோ எதுவாக இருந்தாலும், எங்கிருந்து வேண்டுமானாலும், அவற்றை உடனுக்குடன் தெரிந்து கொள்ளவும், இயன்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவும் இணையதளம் பெரும் உதவியாக இருக்கிறது. அந்த வகையில் தற்போது பிரேசிலில் நடந்த ஒரு சம்பவம் எதார்த்தமான வீடியோவில் பதிவாகி உலகம் முழுவதும் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
பிரேசிலில் அலகோயின்ஹாஸ், என்கிற இடத்தில் ஏழு பெண்கள் இணைந்து ஒரு பெண்ணுக்கு பிறந்தநாள் கொண்டாடி இருக்கின்றனர். பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு அங்கமாக, ஜாலியாக அனைவரும் கைகோர்த்தபடி குதித்து கும்மாளம் போட்டு தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர். அப்போது சற்றும் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீரென பூமியை பிளந்து கொண்டு உடனடியாக அங்கு ஒரு குழி போல் தோன்றி விட, அனைவரும் குழிக்குள் விழுந்து விடுகின்றனர். ஆயினும் ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு மேலே வர முயற்சி செய்கின்றனர். இந்த வீடியோ வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று கூறப்படும் நிலையில், இந்த வீடியோவை பார்த்த பலரும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை கூறி வருகின்றனர்.

மற்ற செய்திகள்
