ட்ரெண்டாகும் "அட ஆமாங்க".. உருட்டு, க்ரிஞ்ச் அட்வைஸ்களை கலாய்த்து வைரல் பதிவுகள்..
முகப்பு > செய்திகள் > தமிழகம்எப்போதும் இணையத்தில் எதாவது ட்ரெண்ட் ஆகிக் கொண்டே இருப்பது வழக்கமான ஒன்று.

இளைஞர்களின் யுகம் என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் யுகத்தில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுகள் மிகவும் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதை காண முடிகிறது. கடந்த வருடங்களில், ‘காண்ட்ராக்டர்’ நேசமணி எனும் வடிவேலுவின் புகழ்பெற்ற ஃப்ரண்ட்ஸ் பட கேரக்டர் திடீரென இணையவாசிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது.
முன்னதாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ஒரே நபர் 10 வருட இடைவெளிகளில் எடுக்கப்பட்ட 2 வெவ்வேறு ஃபோட்டோக்களை பதிவிடுவது ஆகியவை ட்ரெண்ட் ஆகின. பொதுவாகவே பெண்கள் மத்தியில் சாரி சேலஞ்ச் உள்ளிட்டவை ஃபேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆகும்,. கடந்த வாரத்தில் கூட, சர்ச் பார் தொடர்பில் பலரும் இதுபற்றி பேசி வந்தனர்.
அதாவது தங்களது Search list-ல் சென்று எப்போதும் என்ன தேடுகிறார்களோ, அல்லது யார் பெயரை தேடுகிறார்களோ, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டு அவரவர் டைம்லைனில் பகிர வேண்டும் என்கிற விஷயம் கடந்த வாரம் ட்ரெண்ட் ஆகி வந்தது. அதன்படி சர்ச் பாரில் சென்று பார்த்தால் பலரது ரெகுலர் நண்பர்களை ஃபேஸ்புக் காட்டும்,. இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்துவந்தனர்.
இந்நிலையில் ஃபேஸ்புக்கில் தற்போது ஒரு புதுவிஷயம் ட்ரெண்ட் ஆகிவருகிறது. அதுதான் “அட ஆமாங்க”.
ஆட.. ஆமாங்க.. இந்த ஹேஷ்டேகின் கீழ்தான் பல பதிவுகள் பேஸ்புக்கில் ட்ரெண்டாகி வருகின்றன.
அதாவது இந்த ஹேஷ்டேக் கீழ் பலரும் பல்வேறு விதமான பழங்காலம் முதல் இன்றுவரை சொல்லப்படும் அட்வைஸ், ஆலோசனை, ஓவர் டோஸ் கருத்துக்கள் உள்ளிட்டவற்றில் உள்ள க்ரிஞ்ச் தனமானவற்றை உருட்டுகள் என்று குறிப்பிட்டு, ‘அட.. ஆமாங்க’ என்று பதிவிட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
