இது எப்போல இருந்து? ஃபேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆகும் சர்ச் லிஸ்ட்..!! என்னவாம்?
முகப்பு > செய்திகள் > ஃபன் பேக்ட்ஸ்எப்போதும் இணையத்தில் எதாவது ட்ரெண்ட் ஆகிக் கொண்டே இருப்பது வழக்கமான ஒன்று.

அண்மை காலத்தில் இளைஞர்களின் யுகம் என்று சொல்லக்கூடிய டிஜிட்டல் யுகத்தில் நாம் பார்க்கக்கூடிய நிகழ்வுகள் மிகவும் ஆச்சரியமாகவும் சுவாரஸ்யமாகவும் இருப்பதை காண முடிகிறது. கடந்த வருடங்களில், ‘காண்ட்ராக்டர்’ நேசமணி எனும் வடிவேலுவின் புகழ்பெற்ற ஃப்ரண்ட்ஸ் பட கேரக்டர் திடீரென இணையவாசிகள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது.
முன்னதாக ஐஸ் பக்கெட் சேலஞ்ச், ஒரே நபர் 10 வருட இடைவெளிகளில் எடுக்கப்பட்ட 2 வெவ்வேறு ஃபோட்டோக்களை பதிவிடுவது ஆகியவை ட்ரெண்ட் ஆகின. இந்நிலையில் ஃபேஸ்புக்கில் ஒரு புதுவிஷயம் ட்ரெண்ட் ஆகிவருகிறது. பொதுவாகவே பெண்கள் மத்தியில் சாரி சேலஞ்ச் உள்ளிட்டவை ஃபேஸ்புக்கில் ட்ரெண்ட் ஆகும்,. தற்போது சர்ச் பார் தொடர்பில் பலரும் இதுபற்றி பேசி வருகின்றனர்.
அதாவது தங்களது Search list-ல் சென்று எப்போதும் என்ன தேடுகிறார்களோ, அல்லது யார் பெயரை தேடுகிறார்களோ, அதை ஸ்கிரீன் ஷாட் எடுத்து போட்டு அவரவர் டைம்லைனில் பகிர வேண்டும் என்கிற விஷயம் புதிதாக ட்ரெண்ட் ஆகி வருகிறது, அதன்படி சர்ச் பாரில் சென்று பார்த்தால் பலரது ரெகுலர் நண்பர்களை ஃபேஸ்புக் காட்டும்,. இதனை ஸ்கிரீன் ஷாட் எடுத்து பலரும் பகிர்ந்துவருகின்றனர்.
மேலும் இதை பற்றி பல ஃபேஸ்புக் பயனர்கள் பேசி வருவதும் ட்ரெண்ட் ஆகிவர, புதிதாக இந்த ஏரியாவுக்குள் நுழைய இன்னும் சில பயனர்களுக்கு ‘எதுக்குடா இது ட்ரெண்ட் ஆகுது..?’.. ‘எது என்ன இடம்னே தெரியலயே.. கோவாலு’ என்கிற ரேஞ்சில் எதுவும் புரியாமல் அனத்தி வருகின்றனர். இன்னும் சிலர், ‘ம்ம்க்கும் சர்ச் பண்ற அளவுக்கு இங்கிட்டு ஏது டோலர்ஸ், டோலிகள் நெக்ஸ்ட்டு..’ என்று தட்டிவிட்டு போய்க்கொண்டே இருக்கின்றனர்.

மற்ற செய்திகள்
