"பாவம்யா.. கல்யாணம் முடிஞ்சா... 3 நாளைக்கு இத பண்ணக் கூடாதா??.." வியப்பில் ஆழ்த்தும் வினோத பழக்கம்.. TRENDING
முகப்பு > செய்திகள் > உலகம்பொதுவாக, உலகம் முழுவதும் திருமணம் என்ற நிகழ்வு, இடத்துக்கு இடம், சமுதாயத்திற்கு சமுதாயம் என நிச்சயம் மாறுபட்டிருக்கும்.

ஒவ்வொரு நாட்டிற்குள்ளும் கூட வித்தியாசமான திருமண சடங்குகளும், அதன் பின்னர் கடைபிடிக்கும் முறைகள் என அனைத்துமே பெரும்பாலும் மாறுபட்டு தான் இருக்கும்.
இதில், நாம் புதிதாக அறிந்து கொள்ளும் திருமண முறைகள் நிச்சயம், ஒரு புதுமையான ஒன்றாக கூட தோன்றலாம்.
வினோதமான திருமண நடைமுறை
ஆனால், இந்தோனேசிய நாட்டில் பழங்குடியின மக்கள், திருமண நேரத்தில் கடைபிடிக்கும் மிக மிக வினோதமான பழக்க வழக்கங்கள், கேள்விப்படும் மக்கள் மத்தியில் கடும் வியப்பையும், அதே வேளையில் நிறைய கேள்விகளையும் உருவாக்கி உள்ளது. இந்தோனேசியா மற்றும் மலேசிய நாட்டிற்கு இடைப்பட்ட எல்லை அருகே வடகிழக்கு பகுதியான போர்னியோ என்னும் இடத்தில் திட்டங் என்னும் பழங்குடியின சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.
மக்களின் நம்பிக்கை
அவர்களின் சமூகத்தில், திருமணம் செய்து கொள்ளும் ஜோடிகள், அடுத்த மூன்று நாட்களுக்கு கழிவறையை உபயோகிக்கக் கூடாது என்ற வினோதமான கட்டுப்படடுடன் கூடிய நடைமுறை ஒன்று உள்ளது. ஒரு வேளை, இந்த காட்டுபாடினை அந்த தம்பதிகள் மீறினால், ஏதாவது பயங்கர விளைவுகளை சந்திக்க நேரிடலாம் என்றும் கூறப்படுகிறது. உதாரணத்திற்கு, திருமண வாழ்வில் ஏதேனும் துரோகம் நிகழுதல், வேறு ஏதேனும் கசப்பான சம்பவங்கள் நடைபெறுவது உள்ளிட்ட சம்பவங்கள் ஏதாவது நடைபெறும் என்பது அங்குள்ள மக்களின் நம்பிக்கையாக உள்ளது.
3 நாட்கள் தடை..
மேலும், இந்த 3 நாட்கள் அந்த தம்பதியை கண்காணிக்க ஆட்கள் இருப்பார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த 3 நாட்களில், அவர்களை சிறிய அறை ஒன்றில் அடைத்து, அவர்களுக்கு குறைந்த அளவிலான உணவு மற்றும் தண்ணீரே கொடுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதன் பின்னர் தான், அவர்களை வெளியே கொண்டு வந்து, குளிக்க வைத்து, கழிவறை செல்ல அனுமதிப்பார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
இந்த மூன்று நாட்களில் உருவாகும் சவாலை சந்தித்து, அதில் வெற்றி பெறும் தம்பதிகள் தான், திருமண வாழ்வில் நீடித்திருப்பார்கள் என்றும் கூறுகின்றனர் அப்பகுதி மக்கள். இதனை எதிர்கொள்ள முடியாதவர்களின் வாழ்க்கையில் துரதிர்ஷ்டம் ஏற்படலாம் என்பது அந்த பழங்குடி மக்களின் நம்பிக்கை.
இந்த வினோத திருமணம் தொடர்பான செய்திகள், சில ஆண்டுகளுக்கு முன்பே தெரிய வந்திருந்தாலும், இன்னும் இந்த பழங்கால நடைமுறை தொடர்ந்து அமலில் இருந்து வருகிறது. அதே போல, இந்த விஷயம் தற்போதும் இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருவதால், இந்த மக்களின் திருமண சடங்குகள் ட்ரெண்டிங்கிலும் இருக்கிறது.

மற்ற செய்திகள்
