NEEYA NAANA : "யாருய்யா இவரு".. ஒரே ஒரு ஐஸ் க்ரீம்.. இந்த வார நீயா நானாவில் ட்ரெண்ட் ஆன இளைஞர்.!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நீயா நானா நிகழ்ச்சி கடந்த வாரம் முதல் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது. பல வருடங்களாகவே தமிழின் முன்னணி ரியாலிட்டி விவாத நிகழ்ச்சியாக இருந்து வரும் நீயா நானா பல்வேறு முற்போக்கான தலைப்புகள் தொடங்கி எளிய குடும்பங்களில் இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை கூட விவாத பொருளாக மாற்றி இருக்கிறது.

தொடர்ச்சியான விவாதங்கள், உரையாடல்கள் மூலம் குறிப்பிட்ட கருத்தையோ எதார்த்தமான விஷயங்களையோ அனைவருக்கும் கொண்டு சேர்க்கிறது இந்த நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள் எல்லாரையும் போல சாதாரணமாக தினசரி வாழ்க்கை வாழக்கூடிய மக்கள்.
அவர்கள் தங்களுடைய கருத்துப் பதிவுகளை இந்த நிகழ்ச்சியில் கொடுப்பதன் மூலம் உலகம் முழுவதும் இவர்களுடைய கருத்துக்கள் வெவ்வேறு கோணங்களில் சென்று சேர்கின்றன.அதன் மூலம் பலருக்கும் புதிய புரிதல்கள் உண்டாகின்றன. ஒட்டுமொத்தமாக குறிப்பிட்ட ஒரு விஷயத்தைப் பற்றிய புதிய பார்வையை நவீனமான கோணத்தில் விவாதிக்கக் கூடிய இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் ஒரு குடும்பம் ட்ரெண்டானது. அதிகம் சம்பாதிக்கும் மனைவி மற்றும் அந்த வீட்டில் இருக்கும் கணவர் ஆகியோர் குறித்த இந்த டாப்பிக் வைரலானது.
இதனை தொடர்ந்து தற்போது தங்களுக்கு காதலில் ராசி இல்லை என்று சொல்லக்கூடிய ஆண்கள், அவர்கள் காதலில் சாமர்த்தியம் இல்லாதவர்கள் என்று ஆண்களிடம் இருக்கும் போதாமைகளை சொல்லக்கூடிய பெண்கள் ஆகிய இருவருக்குமான விவாத நிகழ்ச்சி கலகலப்பாக நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பங்கு பெற்று பேசிய அனைவருமே வைரலாகி இருக்கின்றனர். அதற்கு காரணம் இந்த நிகழ்ச்சியை அவர்கள் மிகவும் ஸ்போர்ட்டிவாக அணுகிய விதமும், இந்த நிகழ்ச்சியை கலகலப்பாகவும், எதார்த்த புரிதலுடனும் அடுத்தடுத்த கட்டங்களுக்கு எடுத்துச் சென்ற விதமும்தான்.. இந்த நிகழ்ச்சி இந்த வார இறுதியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிகழ்ச்சியில் ஆண்கள் பகுதியில் இருந்த நபர் ஒருவர் பேசும்பொழுது, தான் ஒரு இசைக் கலைஞராக ஒரு பாடல் உருவாக்கியிருப்பதாகவும், அந்த பாடல், தான் விரும்ப நினைக்கும் எதிர்கால மனைவி குறித்தும், அப்பெண்ணுடைய கர்ப்ப காலத்தில் அவரை எப்படி எல்லாம் பார்த்துக் கொள்வதாக இருக்கிறார் என்பது குறித்துமான பாடல் என்றும் கூறியிருந்தார். ஆனால் அப்படி யாரும் இன்னும் அமையவில்லை என்று ஆதங்கமாய் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து அந்த பாடலை பெண்கள் முன் பாடியும் காட்டினார்.
அதன் பிறகு அங்கு சில ஐஸ்கிரீம்கள் வைக்கப்பட்டன. அந்த ஐஸ்கிரீமில் ஏதோ ஒரு ஐஸ்கிரீமில் ஹார்ட்டின் போட்ட சாக்லேட் இருக்கிறது. அதை அனைத்து ஆண்களும் எடுத்து சாப்பிட்டனர். அப்போது இந்த இசைக் கலைஞர் கையில் அந்த ஹார்ட்டின் சாக்லேட் கிடைக்கிறது. அவர் தனக்கு அந்த சாக்லேட் கிடைத்ததாக கூறினார். இதனை தொடர்ந்து அவர் நிகழ்ச்சிக்கு பேச வந்த பெண்களின் நடுவே அமர, ஒரு புகைப்படம் கிளிக்கப்பட்டது. இதனை அடுத்து அவர் இந்த வார ட்ரெண்ட் ஆகிவிட்டார்.

மற்ற செய்திகள்
