எனக்கு ஏன் ஆண்டவா கல்யாணம் பண்ணி வெச்சே??.. பாராகிளைடிங் போது அழுது புலம்பிய இளம்பெண்.. நடுவானில் நடந்த சம்பவம்

முகப்பு > செய்திகள் > இந்தியா

By Ajith Kumar V | Jan 18, 2022 07:28 PM

பாராகிளைடிங் செய்த பெண் ஒருவரின் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

trending paragliding woman crying in the sky video gone viral

இன்றைய டிஜிட்டல் யுகத்தில், இந்த உலகின் மூலையில் என்ன சம்பவம் நடந்தாலும், அது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள், மிகவும் வேகமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆகும்.

அதிலும், சற்று வேடிக்கை மற்றும் நகைச்சுவை உணர்வும் கலந்திருந்தால், பிறகு சொல்லவே வேண்டாம். பட்டித் தொட்டி எங்கிலும் அந்த வீடியோ வைரலாக தொடங்கி விடும்.

பாராகிளைடிங்

அதிலும் குறிப்பாக, சமீப காலங்களில் பாராகிளைடிங் செய்யும் நபர்களின் வீடியோக்கள், இணையத்தை அதிகம் ஆக்கிரமித்து வருகிறது. இந்தியாவிலும் இந்த பாராகிளைடிங் சாகசம் செய்பவர்களின் எணிக்கை அதிகரித்து வருகிறது. பாராகிளைடிங் என்பது, நடுவானில் பாராசூட் உதவியுடன் பறந்து செல்வது போன்ற ஒன்றாகும்.

trending paragliding woman crying in the sky video gone viral

சாகசம்

சாகச விரும்பிகளுக்கு பிரியப்பட்ட ஒன்றாக இது பார்க்கப்படும் நிலையில், பலரும் இந்த அனுபவத்தை மேற்கொண்டு வருகின்றனர். புதிதாக திருமணமாகி, பல இடங்களில் சுற்றுலா செல்லும் தம்பதிகள் அதிகம் பேர், இந்த சாகசத்தில் ஈடுபட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

trending paragliding woman crying in the sky video gone viral

வைரல் வீடியோ

இந்நிலையில், அப்படி பாராகிளைடிங் செய்யும் போது, பயத்தில் கூச்சல் போடும் பெண் ஒருவரின் வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. கணவரின் விருப்பத்தின் பெயரில், பாராகிளைடிங் அனுபவத்திற்காக சென்ற அந்த பெண், பறக்க ஆரம்பித்தது முதலே கத்திக் கூச்சல் போடத் தொடங்கியுள்ளார்.

சமாதானம் அடையவில்லை

அவரை சமாதானம் செய்ய வேண்டி, பின்னால் இருந்த பயிற்சியாளர் பல்வேறு வகையில் ஆறுதல் கூற முயற்சி செய்தார். இருந்த போதும், அந்த பெண் சமாதானம் அடையவில்லை. ஒவ்வொரு நொடியும், கதறி அழும் அந்த பெண், கீழே பார்ப்பதற்கு மிகவும் பயமாக உள்ளது என பயிற்சியாளரிடம் தெரிவித்துள்ளார். மேலும், கையில் இருந்த செல்போனையும் அவரிடம் கொடுத்துள்ளார்.

 

trending paragliding woman crying in the sky video gone viral

நீங்க தான் இனி வைரல்

அது மட்டுமில்லாமல், இந்த சாகசத்திற்கு மத்தியில், தன்னை அழைத்து வந்த கணவரைக் குறித்தும், தனக்கு ஏன் கல்யாணம் நடந்தது என்றும் ஆண்டவனிடம் பயத்தில் முறையிடுகிறார். இறுதியில், அந்த பயிற்சியாளர் 'உங்களின் வீடியோ வைரலாக போகிறது' என தெரிவிக்க, இதனைக் கேட்டதும், ஒரு நொடி சிரித்த அந்த பெண், மீண்டும் சத்தமாக அலற ஆரம்பித்தார்.

trending paragliding woman crying in the sky video gone viral

கருத்து

இது தொடர்பான வீடியோக்கள், தற்போது நெட்டிசன்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது. ஆரம்பத்தில் இருந்தே, தனக்கு பயமாக இருப்பதை அந்த பெண் குறிப்பிட்ட போதும், கணவரின் பெயரால், பாராகிளைடிங் செய்த பெண்ணின் வீடியோவிற்கு, நெட்டிசன்கள் பலரும், பல விதமான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

 

 

Tags : #PARAGLIDING #TRENDING #VIRAL VIDEO #டிரெண்டிங் #வைரல் வீடியோ

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Trending paragliding woman crying in the sky video gone viral | India News.