'பேஷன்ட் உயிருக்கு போராடிட்டு இருக்கப்போ...' ஆப்பரேஷன் தியேட்டர்ல பண்ற 'வேலையா' இது...? - அதிரடி நடவடிக்கை...!
முகப்பு > செய்திகள் > உலகம்ஆப்பரேஷன் செய்து கொண்டிருக்கையில் வீடியோவுக்காக நடனமாடுவது, ஜோக் சொல்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல டாக்டர் டேனியல்.

இந்தியாவில் தடை விதிக்கப்பட்டிருந்தாலும் பல்வேறு நாடுகளில் 'டிக் டாக்' இன்னமும் மிகப் பிரபலமான செயலிகளில் ஒன்றாக உள்ளது. ஆஸ்திரேலியா நாட்டிலும் 'டிக் டாக்' ஆப் லட்சக்கணக்கான மக்களினால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக இருக்கும் டேனியல் அரோனோவ் என்பவர் டிக் டாக்' மூலமாக பிரலமாக அறியப்படுகிறார். 'டிக் டாக்கில் இவருக்கு 13 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பின் தொடர்கின்றனர். பிளாஸ்டிக் அறுவை சிகிச்சைகள் பற்றி அதிகம் அறியப்படாத விஷயங்களை டேனியல் அரோனோவ் தனது டிக்டாக்கில் பகிர்ந்துள்ளார்.
ஆனால் இவர் 'டிக்டாக்'-க்கு அடிமையாகி இருப்பதாகவும், அறுவை சிகிச்சையின்போது அதில் முழுக்கவனம் அதில் செலுத்தாமல் 'டிக்டாக்'-க்கு வீடியோ எடுப்பதில் கவனம் செலுத்துவதாகவும் தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தன. அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கையில் வீடியோவுக்காக நடனமாடுவது, ஜோக் சொல்வது உள்ளிட்ட செயல்களிலும் டேனியல் அரோனோவ் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் நோயாளிகளின் அனுமதியின்றி ஆப்பரேஷன் செய்யும் வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், புகார்கள் அதிகமாகவே, ஆப்பரேஷன் செய்ய டேனியல் அரோனோவுக்கு ஆஸ்திரேலிய அரசின் சுகாதார பயிற்சியாளர் ஒழுங்குமுறை நிறுவனம் தடை விதித்துள்ளது. மேலும் ஆப்பரேஷன் தொடர்பான வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் இருந்து உடனடியாக நீக்கவும் அவருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

மற்ற செய்திகள்
