'என் LOVE'ல உங்களுக்கு என்ன பிரச்சனை'... 'நெட்டிசன் கேட்ட ஏடா கூடமான கேள்வி'... இளைஞர் கொடுத்த பதிலடி!
முகப்பு > செய்திகள் > உலகம்60 வயது மூதாட்டியைக் காதலிக்கும் இளைஞரிடம் கேட்ட கேள்விக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த 23 வயது இளைஞர் Quran. சமூகவலைத்தளங்களில் மிகவும் பிரபலமான இவருக்கு டிக் டாக் பக்கத்தில், 416,000 பாலோவர்கள் இவரைப் பின்தொடர்கிறார்கள். இந்நிலையில், இவர் சமீபத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவருடன் நெருங்கிய நிலையிலும், முத்தம் கொடுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பது போன்ற புகைப்படம் மற்றும் வீடியோக்களை பதிவிட்டுள்ளார்.
அதோடு தனது காதலைக் குறிக்கும் வண்ணத்தில் சில வரிகளையும் குறிப்பிட்டிருந்தார். இதைக் பார்த்த Quranயின் பாலோவர்கள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். நெட்டிசன் ஒருவர் நான் உங்களுடைய பாட்டி என்று நினைத்தேன் எனப் பதிவிட்டிருந்தார். மேலும் ஒருவர் இது எந்த அளவிற்கு உண்மையானது என்று தெரியவில்லை, அதே சமயம் அந்த பெண் பணக்காரராக இருக்கலாம், அதன் காரணமாக மட்டுமே இவர் அந்த மூதாட்டியைக் காதலிக்கலாம் எனவும் பதிவிட்டிருந்தார்.
அதோடு நிற்காமல் சிலர் மிகவும் மோசமான கருத்துகளையும் அவரது வீடியோவின் கீழ் பதிவிட்டிருந்தார்கள். Quran மூதாட்டியுடன் பதிவிட்டிருந்த வீடியோவை 3.7 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் பார்த்திருந்தனர். ஆனால் Quran நெட்டிசன்கள் கேட்ட எந்த கேள்விக்கும் பதிலளிக்காமல் இருந்தார். இந்நிலையில் தொடர்ந்து பல மோசமான கருத்துகள் வந்த நிலையில் தற்போது அதுகுறித்து பதிலளித்துள்ளார்.
அதன்படி ஒருவர் உங்களின் இந்த டேட்டிங்கிற்கு வீட்டில் ஒப்புக் கொள்ளுகிறார்களா என்ற கேள்விக்கு, அவர்கள் இருவருமே ஆம் என்று குறிப்பிட்டுள்ளனர். மேலும், Quran வீடியோ ஒன்றில், நான் என்னுடைய பெண்ணை பாதுகாக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.மேலும் எங்கள் காதல் உணர்வுப் பூர்வமானது. நாங்கள் காதலித்தால் உங்களுக்கு என்ன பிரச்சனை எனவும் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
