90S KIDS-ன் ஃபேவ்ரைட் நடிகர் கையால் விருது பெற்ற 'MICSET' ஸ்ரீராம்.. புகழுடன் செய்த FUN!
முகப்பு > செய்திகள் > கதைகள்கடந்த 7 வருடங்களாக Behindwoods Gold Medals விருது வழங்கும் விழா வெற்றிகரமாக நிகழ்ந்துவருகிறது.

இதன் அடுத்த கட்ட நகர்வாக டிஜிட்டல் மற்றும் சோஷியல் மீடியா துறைகளில் சாதனை படைப்பவர்களை கவுரவிக்கும் பிஹைண்ட்வுட்ஸ் கோல்டு டிஜிட்டல் & டிவி விருதுகள் (Behindwoods Gold Digital & TV Awards) இன்று (மார்ச் 7-ஆம் தேதி) வழங்கப்படுகின்றன.
இந்நிகழ்வில் MICSET ஸ்ரீராம்க்கும் அவரது குழுவினருக்கும் THE BEHINDWOODS GOLD BEST DIGITAL CONTENT CREATOR விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.விருது பெற்ற கையோடு இந்த விருதினை தொகுத்துவழங்கும் விஜய் டிவி புகழை வேடிக்கையாக கட்டிக்கொண்டு அழுதுள்ளார் ஸ்ரீராம். இந்நிகழ்வை புகழுடன் இணைந்து மணிமேகலை தொகுத்து வழங்குகிறார்.
இந்த விருதினை MICSET ஸ்ரீராம்க்கு வழங்கி சிறப்பித்தவர் வேறு யாருமல்ல 90ஸ் கிட்ஸின் ஃபேவ்ரைட் நடிகர் அருண் பாண்டியன் தான். நடிகரும் தயாரிப்பாளருமான அருண் பாண்டியன், தமது மகளான கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்த அன்பிற்கினியாள் திரைப்படம் வெளியாகி திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

மற்ற செய்திகள்
