'இப்டியா வீட்டுக்கு வந்த பிள்ளய...' .. நெக்ஸ்ட் டைம் வருவேன்.. அப்போ'.. வைரலாகும் இன்னொரு 'திருடன்'!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Siva Sankar | Aug 04, 2019 09:51 PM
மலையாள சினிமாக்களில் சில வகையான அசத்தலான திருடர்களைக் காண முடியும். அந்த திருடர்களின் பேச்சும் செயலும் வேடிக்கையாகத்தான் இருக்குமே தவிர, ஒரு டெரரான திருடர்களாக இருக்க மாட்டார்கள். தமிழில் சூது கவ்வும் வகையறா திரைப்படங்களில் அப்படியான திருடர்களை வகைப்படுத்தியிருப்பார்கள்.

அப்படித்தான், கேரளாவின் கொல்லம் பகுதியில், ஒரு வீட்டினுள் 50 சவரன் நகைகளைக் கொள்ளையடித்த வழக்கில் தேடப்பட்டு வந்த திருட்டுக் குற்றவாளியான் மொட்ட ஜோஸ், அதே பகுதியில் உள்ள வேறொரு வீட்டுக்குத் திருடச் சென்றபோது‘அடுத்த முறையாவது நான் வீட்டு கதவை உடைத்துவிட்டு திருட வரும்போது கொஞ்சமேனும் நகைகளையும், பணத்தையும் வைத்துவிட்டுச் செல்லுங்கள்’ என்று கடிதம் எழுதிவைத்துள்ளார்.
அந்த வீட்டார் வெளியூர் சென்றிருந்த நேரம், அவ்வப்போது ஜோஸ் அந்த ஏரியாவுக்கு வந்துபோவதை அறிந்த போலீஸார், அவரை மாறுவேடத்தில் பிடிக்க, அந்த ஏரியா பணியாளர்கள் போல் வேடமிட்டு, சுற்றியுள்ளனர். அப்படி ஒருமுறை அங்குவந்து சென்ற ஜோஸை போலீஸார் பார்த்துள்ளனர். பிடிக்க முயற்சி செய்தபோது, அவர் எஸ்கேப் ஆகியுள்ளார். அதன் பின் அந்த வீட்டுக்குள் சென்று போலீஸார் தேடியபோது இந்த கடிதமும், ஜோஸ் அடிக்கடி அங்கு வந்து, தங்கி சென்றதும் தெரியவந்தது.
ஆனால், மொட்ட ஜோஸ், இந்த கடிதம் போலீஸ் கையில் கிடைத்ததால், தானாகவே கொல்லம் போலீஸில் சரணடைந்தார். அவர் மீது 50 சவரன் கொள்ளை அடித்தது, ஆளில்லா வீட்டைத் திருடவும், தங்கவும் பயன்படுத்தியது, போலீஸுக்கு டிமிக்கி கொடுதது என 457, 461, 380 உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
மிக அண்மையில் நெல்லையில் ஒரு திருடன் இதேபோல் விநோத லெட்டர் ஒன்றை எழுதிவைத்துவிட்டுச் சென்றது குறிப்பிடத்தக்கது,
